பட்டியலினத்தவர் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டாரா? வைரலாகும் வீடியோ! கள்ளக்குறிச்சி காவல் துறை விளக்கம்

  • கள்ளக்குறிச்சி: சமூக வலைத்தளங்களில் பட்டியலினத்தைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்பது போன்ற வீடியோ தொடர்பான முதற்கட்ட விசாரணையின் உண்மை நிலை குறித்து காவல் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

    Advertisement

    இதுகுறித்து காவல் துறையினர் அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது: சமூக வலைதளங்களில் பட்டியலினத்தைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்பது போன்ற காணொளி தொடர்பான முதற்கட்ட விசாரணை உண்மை நிலை விளக்கம்.

    Advertisement

    கடந்த 31.10.2026 அன்று மாலை சுமார் 7.15 மணியளவில், பாண்டியன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுசீதரன் மற்றும் அவருடன் 7 நபர்கள் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்று விட்டு, இரண்டு இருசக்கர வாகனங்களில் தலா நான்கு நபர்கள் வீதம் குதிரைச்சந்தல் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது, ஒரு இருசக்கர வாகனத்தின் முகப்பு விளக்கு எரியாத நிலையிலும் அதில் அளவுக்கு அதிகமான நபர்கள் பயணம் செய்ததால், அந்த வாகனத்தை ஓட்டிச் சென்ற அகிலன் என்பவர், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இரு முதியவர்கள் மொட்டையன் (70) மற்றும் இருசாயி அம்மாள் (68) மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது.

    Advertisement

    இதில் காயமடைந்த இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், காயமடைந்தவர்களில் ஒருவரின் மகனும், மற்றொருவரின் உறவினருமான வழக்கறிஞர் பழனிவேல் சம்பவ இடத்திற்கு வந்து புகார் அளிக்கப் போவதாகத் தெரிவித்தார்.

    அப்போது, விபத்தில் தொடர்புடைய தரப்பைச் சேர்ந்த ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டாம் எனக் கூறி, பழனிவேலிடம் மண்டியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.

    இச்சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகார்களின் அடிப்படையில், வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் உட்பட பல்வேறு சட்டங்களுக்கு கீழ் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சம்பவத்தின் உண்மைத் தன்மையை முழுமையாக அறியாமல், சமூக வலைதளங்களில் தவறான மற்றும் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    Advertisement

    இதுதொடர்பாக மாவட்ட காவல்துறையினர் துரிதமாக வழக்கு பதிவு செய்து, உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, விசாரணையின் அடிப்படையில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    English Summary

    Kallakurichi police rejects that no dalit man touches the feet and ask apology in accident. Police asked to stop the spread of rumour in social media.