விஜய்க்கு புதிய சிக்கல்? குழந்தைகள் வைத்து பிரச்சாரம் என வழக்கு! தேர்தல் ஆணையத்துக்கு ஹைகோர்ட் போட்ட உத்தரவு

  • சென்னை: குழந்தைகள் மூலமாக தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேபோன்று பணப்பட்டுவாடா செய்ததாக வந்த குற்றச்சாட்டுகள் பற்றி விளக்கம் அளிக்க திமுக, அதிமுக மற்றும் தவெகவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    Advertisement

    தவெக தலைவர் விஜய் இன்ஸ்டாகிராம் மூலம் ரீல்ஸ் ஆட்சி தான் நடத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். ஏற்கனவே விஜய் தேர்தலுக்கு முன்பு பிரசாரத்தின் போது குட்டி நண்பா நண்பீஸ் என குழந்தைகளை வைத்து ஓட்டு போடுமாறு பிரசாரம் செய்தார்.

    Advertisement

    அதாவது, சென்னையில் இறுதிக்கட்ட பிரசாரத்தின் போது பேசிய விஜய், "வீட்டில் இருக்கும் குட்டி நண்பா நண்பீஸ்.. விஜய் மாமாவுக்கு ஓட்டு போட சொல்லுங்கள்.. பெற்றோரையும் ஓட்டு போடும் வயசில் இருக்கும் அண்ணா, அக்கா, சித்தி, சித்தப்பா எல்லோரையும் விசில் சின்னத்திற்கு ஓட்டு போட சொல்லுங்க" என்று பேசினார்.

    விஜய்யின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. விஜய் தன் அரசியலுக்காக குழந்தைகளை பயன்படுத்துவதா? என தொடர்ச்சியாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. மேலும் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.

    Advertisement

    இதேபோன்று தேர்தலுக்கு அதிகளவில் ஓட்டுக்கு காசு கொடுக்கப்பட்டதாக அதிமுக மற்றும் திமுக மீது வழக்கு பதியப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையம் பதில் தர வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இதேபோன்று அதிமுக, திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளும் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    English Summary

    The Madras High Court has directed the Election Commission of India to respond to a petition alleging that Vijay used children for political campaigning. The court also sought explanations from Dravida Munnetra Kazhagam, All India Anna Dravida Munnetra Kazhagam and TVK regarding allegations of cash distribution during elections.