மதுராந்தகம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு! குவிந்த அரசியல் கட்சியினர்

  • செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில், செங்கல்பட்டில் உள்ள சமூக மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் ஏராளமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒன்றாக கூடியிருக்கிறார்கள்.

    Advertisement

    மதுராந்தகம் சட்டசபை தொகுதிக்கு கடந்த 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், அதிமுக சார்பில் கணிதா சம்பத், திமுக சார்பில் பரந்தாமன், மார்க்சிஸ்ட் சார்பில் சுகந்தி, நாதக சார்பில் ஜானகிராமன், சுயேச்சைகள் என மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    Advertisement

    இந்த தேர்தலில் மொத்தம் 86.26 சதவீதம் ஆகும். இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் கொண்ட வாக்கு பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஆத்தூரில் உள்ள மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்றைய தினம் மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். மொத்தம் 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணும் பணி நடைபெற போகிறது. சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

    இதனை முன்னிட்டு, வாக்கு எண்ணிக்கை மையம் மற்றும் அதன் வளாகம் முழுவதும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    Advertisement

    வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் வேட்பாளர்களின் முகவர்கள், மையத்தின் நுழைவாயில் முன்பு திரண்டனர். அவர்களுக்குப் பல்வேறு கட்டங்களாகப் பாதுகாப்புச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் பின்னரே உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

    வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ள நிலையில், அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் காத்திருக்கின்றனர்.

    English Summary

    Vote counting for the Maduranthagam by poll 2026 is to begin , as heavy police protection at counting centre.