மருந்து கடை உரிமையாளர்கள் நாளை ஸ்ட்ரைக்.. தமிழ்நாட்டில் பாதிப்பு இருக்குமா? அருண்ராஜ் விளக்கம்

  • சென்னை: ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிராக நாளை நடைபெற உள்ள நாடு தழுவிய கடையடைப்பு போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 50 ஆயிரம் மருந்தகங்களில், அவசர தேவைக்காக 5 ஆயிரம் கடைகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    Advertisement

    சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- "மத்திய அரசை எதிர்த்து நாளை மருந்துகடை உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். எனினும் தமிழகத்தில் நாளை 5000 ஃபார்மசி கடைகள் திறந்து தான் இருக்கும்.

    Advertisement

    நாடு தழுவிய கடையடைப்பு போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 50 ஆயிரம் மருந்தகங்களில், அவசர தேவைக்காக 5 ஆயிரம் கடைகள் நாளை வழக்கம்போல் செயல்படும்.

    மருந்துகளின் போதுமான மற்றும் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்ய, மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறையால் மாவட்ட வாரியாக உதவி எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உதவி இயக்குநரின் கீழும் 2 மருந்து ஆய்வாளர்கள் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசோடு கலந்தது ஆலோசித்து ஒரு முடிவெடுக்கப்படும்.

    தமிழ்நாடு அரசு சார்பாக நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் எங்களுடைய முடிவாகும். போதை பொருளை தடுப்பதற்காக முதல்வர் விஜய், ஒரு தனி பிரிவினை உருவாக்கி இருக்கிறார். போதைப்பொருள் தடுப்பதற்காக அதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். நாளை அரசு மருத்துவமனைகளுக்கு ஆய்வுக்கு செல்ல உள்ளோம்" என்று கூறினார்.

    English Summary

    Arunraj, Health Minister has assured that alternative arrangements have been made to avoid inconvenience to the public during the nationwide strike by pharmacy owners against online medicine sales on May 20. Out of 50,000 pharmacies in Tamil Nadu, around 5,000 medical shops will continue to function for emergency needs.