அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச்

  • சென்னை: ஆச்சரியம் அளிக்கும் விதமாக ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் அறிவாலயத்தில் நடைபெற்ற பனையூர் பாபு திமுகவில் இணையும் நிகழ்ச்சி லைவில் ஒளிபரப்பப்பட்டது பேசுபொருளாக மாறி இருக்கிறது. சசிகலா தொடர்பான செய்திகளை மட்டுமே ஒளிபரப்பி வந்த ஜெயா பிளஸ், தற்போது ஸ்டாலின் நிகழ்ச்சியை லைவில் ஒளிபரப்பி இருக்கும் நிலையில், ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் நிர்வாகம் மாறி இருப்பதாகவும், கமர்சியல் ரூட்டுக்கு திரும்பி இருப்பதாகவும் சொல்கின்றனர்.

    Advertisement

    2021 சட்டமன்ற தேர்தலில் விசிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பறையூர் பாபு, அதற்குப் பிறகு ஓரம் கட்டப்பட்டார், 2026 சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. விசிகவில் இருந்து கொண்டே திமுக தலைமைக்கு ஆதரவாகவும் நெருக்கமாகவும் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    Advertisement

    இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் பாலாஜி, பனையூர் பாபு, ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்டோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. முன்னரே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருந்தால் அவர்கள் திமுகவில் இணைந்து திமுக சார்பில் போட்டியிட திட்டமிட்டு இருந்தனர்.

    பனையூர் பாபு

    ஆனால் திமுக பட்டியல் வெளியான பிறகுதான் விசிக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதன் மூலம் திட்டமிட்டு அவர்களை புறக்கணித்திருக்கிறார் திருமாவளவன் என்ற பேச்சும் எழுந்தது. இந்த நிலையில் அதிருப்தியை சமாளிக்கும் வகையில் அவர்களுக்கு கட்சி பொறுப்பை கூடுதலாக வழங்கினார் திருமா. ஆனாலும் அவர்கள் ஆத்திரத்தில் இருந்தனர். இந்த நிலையில் தான் இன்று திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பனையூர் பாபு முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

    Advertisement

    மு.க. ஸ்டாலின்

    ஒரு சாதாரண முன்னாள் எம்எல்ஏ என்றாலும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களை அவர் திரட்டி வந்திருந்தார். அதனால் தான் ஸ்டாலினே நேரில் வந்து அந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.இது அனைவருக்கும் தெரிந்ததுதான். இதில் தான் ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. சசிகலா ஆதரவு தொலைக்காட்சியான ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் ஸ்டாலின் - பனையூர் பாபு பேசியது நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

    ஜெயா பிளஸ் தொலைக்காட்சி

    ஜெயா பிளஸ் தொலைக்காட்சி வரலாற்றில் இதுவரை ஸ்டாலின் பேசியதை நேரடியாக ஒளிபரப்பியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்பாக விசாரித்த போது தான் சில தகவல்கள் கிடைத்தது. ஜெயலலிதா இருந்தவரை ஜெயலலிதாவின் செய்திகளை மட்டுமே ஜெயா பிளஸ் ஒளிபரப்பி வந்த.து அதற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதும் அவரது செய்திகளையும ஒளிபரப்பினர். ஆனால் டிடிவி தினகரன் - சசிகலா தரப்பை எடப்பாடி பழனிச்சாமி பகைத்துக் கொண்டதால் அவரது செய்திகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது.

    Advertisement

    விவேக் ஜெயராமன்

    இதை அடுத்துதான் நியூஸ் ஜெ தொலைக்காட்சி பிறந்தது. தொடர்ந்து சசிகலா ஆதரவு செய்திகளை மட்டுமே ஒளிபரப்பி வந்த ஜெயா பிளஸ் அப்போது அவரது உறவினரின் மகனான விவேக் ஜெயராமனின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த நிலையில் தான் தற்போது விவேக் ஜெயராமன் அந்த பொறுப்பில் இருந்து விலகி இருப்பதும் சசிகலாவின் உறவினரான திவாகரனின் நெருங்கிய உறவினர் ஒருவர் அந்த சேனலின் கட்டுப்பாட்டை எடுத்திருப்பது தெரியவந்தது.

    கமர்சியல் ரூட்

    மேலும் சசிகலாவின் செய்திகளை மட்டும் ஒளிபரப்பாது, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நிகழ்ச்சியும் ஒளிபரப்பினால் கூடுதல் பார்வையாளர்கள் கிடைப்பார்கள் என்பதோடு, ஒரு கட்சி சேனல் என்ற அடையாளத்தை திறந்து விட்டு கமர்சியல் ரூட்டுக்கு மாற வேண்டும் என அந்த நிர்வாகி திட்டமிட்டுள்ளார். அதன் வெளிப்பாடுதான் தற்போது திமுக தலைவர் ஸ்டாலினின் ஒளிபரப்பு நிகழ்ந்த சம்பவம் என சுட்டிக்காட்டுகின்றனர் நம்மிடம் பேசிய சசிகலா ஆதரவாளர்கள்.

    English Summary

    Jaya Plus airing Stalin’s event live fuels speculation over management changes and a possible shift toward a commercial news strategy.