ஸ்டாலின் விரக்தியில் ஏதேதோ பேசுகிறார்.. உண்மை அவருக்கு தெரியாமாலேயே போயிருச்சு! அன்புமணி அட்டாக்!

  • மயிலாடுதுறை: திமுக தயவால் வெற்றி பெற்றார்கள் தற்போது தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ளனர். மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் விரக்தியில் ஏதேதோ பேசுகிறார். மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

    Advertisement

    மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ்," தமிழக முதல்வர் நிர்வாகத்திற்காக நல்ல அதிகாரிகளை நியமித்துள்ளார். கடந்த ஆட்சியில் காவல்துறையில் நல்ல அதிகாரிகள் இருந்தும் சரியாக நிர்வாகம் செய்யாததால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, கஞ்சா, போதைபொருட்கள் விற்பனை நடந்தது.

    Advertisement

    போதைபொருட்களை கட்டுப்படுத்துவேன் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை அளித்தார். 717 கடைகளை மூடஆணை பிறப்பித்தார். இதுவரை 300 கடைகள் மட்டுமே மூடியிருக்கிறார்கள்.

    அறிவித்தப்படி 717 கடைகளையும் மூடவேண்டும். கோவை, விழுப்புரத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த குற்றத்தை செய்தவர்களுக்கு உடனடியாக தூக்குதண்டனை வழங்க வேண்டும். இதற்கு மதுபோதை தான் காரணம். தமிழக முதல்வர் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, போக்குவரத்துதுறை, டாஸ்மாக் ஆகியதுறைகளில் அதிக அளவில் ஊழல், தென்மாவட்டங்களில் கனிமவள ஊழல் தொடர்ந்து நடந்தது.

    Advertisement

    தமிழகத்தில் மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக்கல்லூரிகள் இல்லை. அவசியம் மருத்துவக்கல்லூரிகள் 6 மாவட்டங்களில் கொண்டுவர வேண்டும். கும்பகோணம் தனிமாவட்டமாக உருவாக்க வேண்டும். ஸ்டாலின் முதல்வராக வேண்டுமென்ற சொன்ன காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியில் போட்டியிட்டார்கள். திமுக தயவால் வெற்றிபெற்றார்கள் தற்போது தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ளனர்.மக்கள் பார்த்துகொண்டு இருக்கிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் விரக்தியில் ஏதேதோ பேசுகிறார்.

    மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும். முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது திமுக ஆட்சியில் மக்களுக்கு கோபமில்லை என்று கூறினார். ஸ்டாலின் கவனத்திற்கு செல்லாமல் இருந்திருக்கலாம். திமுக ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை. விளம்பர ஆட்சிதான் நடந்தது. உண்மை நிலவரத்தை ஸ்டாலின் கவனத்திற்கு கட்சியினர் கொண்டு செல்லவில்லை. பாமக ஆக்கப்பூர்வமான கட்சியாக செயல்பட்டுகொண்டு இருக்கிறோம். நல்லயோசனைகளை தமிழக முதல்வருக்கு சொல்வோம்.

    Advertisement

    நல்லது செய்தால் பாராட்டுவோம். தவறுசெய்தால் கடுமையாக எதிர்த்து பாமக போராடும். ஈரான்போரால் உலக முழுவதும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைவுதான் இருந்தாலும் தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை மக்களிடம் கொண்டுசெல்லாமல் இருக்க வேண்டும். ஈரான் போரில் ஒருசில மாதங்களில் தீர்வுகிடைக்கும் என்று நான் நம்புகிறேன். 3 மாதத்திற்கு காஸ், கச்சா எண்ணெய்கள் இருப்பு உள்ளதாக பிரதமர் சொல்லியிருக்கிறார்.

    விஜய் ஆட்சிக்குவருவதற்கு முன்பு தேர்தல் வாக்குறுதியில் கூட்டுறவு பயிர் கடனை தள்ளுபடி செய்வோம் என்று கூறினார்.அதனை செய்ய வேண்டும். கடந்த திமுக ஆட்சிகாலத்தில் 4 லட்சத்து 96 ஆயிரம் கோடி கடன் வாங்கினார்கள். இதில் மூலதன செலவுகளுக்காக ரூ.1.5 லட்சம் கோடி பயன்படுத்தி இருக்கிறது. மீதி ரூ.3.5 லட்சம் கோடி கடனுக்கு வட்டி கட்டுவதற்கு வாங்கி இருக்கிறார்கள். கடன் வாங்கினால் வளர்ச்சி, கட்டுமானங்கள் வேண்டும். நிதிநெருக்கடி சூழல் இருக்கிறது அதனை சரிசெய்ய வேண்டும். மத்திய அரசு தமிழகத்திற்கு உதவ வேண்டும்." என்றார்.

    English Summary

    PMK leader Anbumani Ramadoss criticises Stalin, backs strict action on crimes and urges Vijay government to fulfil promises.