சென்னை: 2021-ல் அதிமுக அரசை விமர்சித்து திமுக ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட்டது. இப்போது 2026-ல், திமுக அரசை விமர்சித்து புதிதாகப் பதவியேற்றுள்ள தவெக அரசு ஒரு வெள்ளை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறது. அன்று பழனிவேல் தியாகராஜன், இன்று மரிய வில்சன்! டெல்லி கணக்கையும், கோட்டை கஜானாவையும் அலசி ஆராய்ந்து வெளியிடப்பட்டுள்ள இந்த இரண்டு 'வெள்ளை அறிக்கை'களுக்குள் ஒளிந்திருக்கும் நிஜமான நிதி யுத்தம் என்ன என்பதை பார்ப்போம்.
2021-ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழக நிதித்துறை அமைச்சராக இருந்த போது தாக்கல் செய்யப்பட்ட தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையின் மிக முக்கியமான தரவுகள், கடன் விவரங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்த சில விவரங்களை பார்ப்போம்.
2021 மார்ச் 31 நிலவரப்படி, தமிழக அரசின் மொத்த நேரடிக் கடன் சுமார் ₹5.70 லட்சம் கோடி ஆக இருந்தது. ஒவ்வொருவர் தலையிலும் விழுந்த கடன்: தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் சராசரியாக ₹2,63,976 பொதுக்கடன் இருப்பதாக இந்த வெள்ளை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது. உள்நாட்டு உற்பத்திக்கும் கடனுக்குமான விகிதம் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை பெருமளவு அதிகரித்து, அது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 3.16% ஆக உயர்ந்திருந்தது. அத்துடன், கடந்த சில ஆண்டுகளாக சம்பளம், ஓய்வூதியம் மற்றும் வட்டி செலுத்துதல் போன்ற அன்றாடச் செலவுகளுக்கே அரசு கடன்களை நம்பியிருக்கும் அவலநிலை உருவானது. அதிக கடன் மற்றும் நஷ்டத்தில் இருந்த துறை (மின்சாரத் துறை) தமிழகத்திலேயே மிக மோசமான நிதி நெருக்கடியிலும் கடன் சுமையிலும் இருந்தது மின்சாரத் துறைதான் (TANGEDCO / TANTRANSCO). மின்சார வாரியம் தனது செயல்பாட்டுச் செலவுகளைக் கூட மீட்டெடுக்க முடியாமல், வட்டிச் சுமையோடு பெரும் நிலுவைத் தொகையை வைத்திருந்தது. மின்சாரக் கடனுக்கான முக்கியக் காரணங்கள் மின்சாரக் கட்டணம் முறையாகவும் குறிப்பிட்ட கால இடைவெளியிலும் மாற்றி அமைக்கப்படாததே (கடந்த 10 ஆண்டுகளில் வெறும் 4 முறை மட்டுமே கட்டணம் மாற்றப்பட்டது) இந்தத் துறை பெரும் நஷ்டத்தைச் சந்திக்க முதன்மைக் காரணமாக அமைந்தது. இக்கழகத்தின் ஒட்டுமொத்த கடன் மற்றும் பொறுப்புகள் 2011-12 இல் ₹10,156 கோடியாக இருந்தது, 2020-21 இல் 151.75% அதிகரித்து ₹25,568 கோடி ஆக உயர்ந்தது. ஊழியர்களின் சம்பளச் செலவு 402% வரை உயர்ந்ததும் இதற்கு ஒரு காரணமாகும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் ஒட்டுமொத்த கடன் மற்றும் பொறுப்புகள் 2011-12 இல் வெறும் ₹422 கோடியாக இருந்தது, 2020-21 நிலவரப்படி 584% அதிகரித்து ₹2,890 கோடி ஆக எகிறியது. இதில் ₹1,518 கோடி மின்சார வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையாகும். சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் திரண்ட நஷ்டம் மற்றும் கடன் பொறுப்புகள் ₹1,909 கோடி ஆக உயர்ந்தது. இதற்குக் காரணம் ஒரு கிலோ லிட்டர் குடிநீர் வழங்க ₹36.58 செலவாகும் நிலையில், மக்களிடமிருந்து வெறும் 38% தொகையை மட்டுமே (₹14.08) கட்டணமாக வசூலித்ததுதான். தமிழகத்தின் சராசரி ஆண்டு பொருளாதார வளர்ச்சி விகிதம் (GSDP) 2006-2011 காலகட்டத்தில் 10.15% ஆக இருந்த நிலையில், அது 2016-2020 காலகட்டத்தில் 7.22% ஆகக் கடுமையாகச் சரிந்தது. நிதி ஒழுக்கமின்மை மற்றும் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு (2016), ஜிஎஸ்டி (2017) போன்ற பொருளாதார மாற்றங்களால், தனிநபர் வருமான அடிப்படையில் (Per-capita GSDP) பெரிய மாநிலங்களின் வரிசையில் 4-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு 5-வது இடத்திற்குப் பின்தங்கியது. கேரளா, கர்நாடகா, தெலங்கானா போன்ற அண்டை மாநிலங்கள் தமிழ்நாட்டை விட முன்னேறின. 2021-ல் திமுக அரசு பொறுப்பேற்ற அந்த நிதியாண்டின் கணக்குப்படி (2020-21 Revised Estimates), தமிழக அரசு ஒரு வருடத்திற்கு வட்டியாக மட்டும் தோராயமாக ₹36,554 கோடி செலுத்தியுள்ளது. அன்றாட அரசுச் செலவுகளான சம்பளம், ஓய்வூதியம் மற்றும் வட்டி கட்டுவதற்கே அரசு புதிய கடன்களை வாங்க வேண்டியிருந்ததால், ஒட்டுமொத்த வருவாயில் பெரும் பகுதி வட்டியாகவே கைவிட்டுப் போனது. இதனிடையே தமிழகத்தின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை முதல்வர் விஜய் தலைமையிலான அரசில் நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று வெளியிட்டார். அரசின் வரவு செலவு கணக்குகள், நிதி நிலை, கடந்த அரசின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். அதன் முக்கிய அம்சங்களை பார்ப்போம். * 2021 முதல் 2026 வரை வருவாய் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இந்தக் கால கட்டத்தில் சொந்த வரி வருவாய் வரலாறு காணாத அளவில் குறைந்துள்ளது, மூலதன செலவு குறைந்துள்ளது, கட்டாய செலவு உயர்ந்துள்ளது. * தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை கோவிட் தொற்று ஆண்டைவிட கடந்த 5 ஆண்டுகளில் குறைந்துள்ளது. * ரூ.10 லட்சம் கோடி மாநிலத்துக்கு நேரடி கடன் உள்ளது. * மாநிலத்தில் வருவாய் பற்றாக்குறை 78,324 கோடி ரூபாய். * மாநிலத்தின் மொத்த செலவுகளில் 22.8% வட்டிக்கு செல்கிறது. * தமிழகத்தில் மொத்த செலவில் 64.4% கட்டாய செலவுக்கு செல்கிறது. * பொதுத்துறை நிறுவனங்களின் கடனையும் சேர்த்து மாநிலத்தின் மொத்தக் கடன் பொறுப்பு ரூ.13.18 லட்சம் கோடியாக உள்ளது. * தமிழகத்தில் 4.87 லட்சம் கோடி ரூபாய் கடன் கடந்த 5 ஆண்டுகளில் சேர்ந்துள்ளது. * சுதந்திரத்துக்குப் பின்னர் 60 ஆண்டுகளில் பெற்ற கடனை விட, கடந்த 5 ஆண்டுகளில் பெற்ற கடனின் அளவு அதிகம். * 2020-21-ல் ரூ.67,087 ஆக இருந்த ஒவ்வொருவருக்குமான கடன் பொறுப்பு இப்போது ரூ.1,28,934 ஆக உள்ளது. * மாநிலத்தில் சொந்த வருவாயில் மூன்றில் ஒரு பங்கு வட்டிக்கே செல்கிறது. ஒவ்வொரு ஆண்டுக்கும் வட்டி செலவு ரூ.67, 050 கோடியாக உள்ளது. * மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ஜிஎஸ்டிபி 5.45% ஆக குறைந்து உள்ளது. * மாநிலத்தில் பெருமளவு கனிம வள ஆதாரம் இருந்து வருவாய் இல்லை. கனிம வளத்துறை ஊழலால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. * 2021-22-ல் 10 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.32% ஆக குறைந்துள்ளது. * தமிழகத்தில் நிதி சார்ந்த அவசர நிலை ஏற்பட்டுள்ளது. * ஒன்றிய அரசின் நிதிப் பகிர்வு குறைந்ததால் மாநில வருவாய் வீழ்ச்சி கண்டுள்ளது. வருவாய் வரவு வீழ்ச்சியால் கடன் பெறும் நிலை உருவாகியுள்ளது. * சொத்துப் பதிவில் இழக்கும் வருவாய் மிகவும் அதிகமாக உள்ளது. * மாநிலத்தின் மூலதன செலவு ரூ.50,911 கோடி ஆக உள்ளது. * மின் துறையில் 2.47 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது, * மின் வாரியத்தின் நஷ்டம் ரூ.1.82 லட்சம் கோடி ஆகும். * போக்குவரத்து கழகங்கள் ரூ.72,667 கோடி இழப்பை சந்தித்துள்ளன. பேருந்துகளின் ஒரு கிலோமீட்டர் இயக்கத்துக்கு ரூ.78.81 செலவு ஆகும் நிலையில், வருவாய் ரூ.25.97 மட்டுமே. * தமிழகத்தில் முதியோர் சதவீதம் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. * தமிழகத்தில் வருவாய் ஈட்டுவோர் சதவீதம் குறைவு, சார்ந்து இருப்போர் சதவீதம் அதிகம். * தமிழகம் செல்வந்தர்கள் மாநிலமாக உருவாவதற்கு முன்பே, முதியோர் மாநிலமாக உருவாகும் சூழல் உள்ளது. * நலத்திட்டங்கள் தமிழகத்தில் பெருமைமிக்க பாரம்பரியம், அந்த பாரம்பரியம் தொடரும். * இனி வரும் நாட்கள் சவாலானவை. ஊழலை ஒழிப்பதன் மூலம் தமிழகத்தின் வருவாய் அதிகரிக்கும். ஊழலற்ற, நேர்மையான நிர்வாகம் இந்த இழப்புகளை சரி செய்வோம் என்று அந்த வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது" இவ்வாறு மரியா வில்சன் தாக்கல் செய்த இன்றைய வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ஒட்டுமொத்த கடன் சுமை
மின் தொடரமைப்பு கழகத்தின் நஷ்டம்
குடிநீர் வாரியத்தின் கடன்
சென்னை குடிநீர் வாரியத்தின் நிலை
பொருளாதார வளர்ச்சி விகிதம் சரிவு
மாநிலத் தரவரிசையில் பின்னடைவு
வட்டி எவ்வளவு
2026 வெள்ளை அறிக்கை
திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் இரு மடங்காக அதிகரித்துள்ளது.