ஊரே கரெண்ட் இல்லை.. உங்களுக்கு ஏசி கவலையா.. வெங்கட் பிரபுவை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்

  • சென்னை: பிரபல திரைப்பட இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில், பிரபல நுகர்வோர் தயாரிப்பு நிறுவனமான கோத்ரெஜ் அப்ளையன்சஸ் நிறுவனத்தின் மோசமான வாடிக்கையாளர் சேவை குறித்து தனது கடுமையான அதிருப்தியைப் பதிவிட்டிருந்தார். அந்த பதவில் அவர் கூறுகையில், "கோத்ரெஜ் அப்ளையன்சஸ் ஏர் கண்டிஷனரின் சேவை மற்றும் அவர்களின் பதில் மிகவும் மோசமாக உள்ளது. நான் புகார் அளித்து ஒரு மாதம் ஆகிவிட்டது, ஆனால் இன்னும் எந்தப் பதிலும் இல்லை... தயவுசெய்து உங்கள் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துங்கள்" என்று கூறியிருந்தார். இதற்கு கூட கிண்டல் செய்து நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் கோடை வெயில் மிகத் தீவிரமாக இருக்கிறது. ஏசி போடாமல் பகல் மற்றும் இரவில் வாழவே முடியாத அளவிற்கு புழுக்கம் இருக்கிறது. பல வீடுகளில் இரவிலும், பகலிலும் ஏசி போடுகிறார்கள். சில வீடுகளில் 24 மணி நேரமும் ஏசி ஓடுகிறது. அந்த அளவிற்கு ஏசியின் தேவை அதிகமாக உள்ளது. அதே போல் இப்போது ஏசி பழுதுபார்ப்பு மற்றும் சர்வீஸ்க்காக பலரும் நிறுவனங்களை அழைத்து தங்கள் ஆதங்கத்தை பதிவு செய்து வருகிறார்கள். ஏசி சர்வீஸ் தொடர்பாக பொதுமக்களைத் தாண்டி வெங்கட் பிரபு போன்ற பெரிய சினிமா பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    Advertisement

    வழக்கமாகப் பொதுமக்கள் ட்விட்டரில் நிறுவனங்களைக் டேக் செய்து சண்டை போடுவதைப் பார்த்திருப்போம். இப்போது ஒரு பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவே நேரடியாகத் தனது ஏசி ஒரு மாதமாக வேலை செய்யவில்லை என்று பொதுவெளியில் பதிவிட்டுள்ளார். கோத்ரெஜ் நிறுவனத்தினை டேக் செய்து பதிவிட்டுள்ளார். இதற்கு அந்த நிறுவனமே வெங்கட் பிரவுவிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

    "கோத்ரெஜ் அப்ளையன்சஸ் ஏர் கண்டிஷனரின் சேவை மற்றும் அவர்களின் பதில் மிகவும் மோசமாக உள்ளது. நான் புகார் அளித்து ஒரு மாதம் ஆகிவிட்டது, ஆனால் இன்னும் எந்தப் பதிலும் இல்லை... தயவுசெய்து உங்கள் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துங்கள்" என்று வெங்கட் பிரபு கூறியிருந்தார்.

    Advertisement

    இதற்கு கோத்ரெஜ் நிறுவனம் வெளியிட்ட பதிலில், இதைக் கேள்விப்படுவதற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். உங்களின் இந்தப் பிரச்சனையை விரைவாகத் தீர்ப்பதற்காக, எங்கள் (உயர்மட்ட) குழுவின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்கிறோம். உங்களின் இந்தப் பிரச்சனையை முன்னுரிமை அடிப்படையில் தீர்த்து வைக்க ஏதுவாக, தயவுசெய்து உங்களுடைய புகார் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் ஆகிய விவரங்களை எங்களுக்கு நேரடியாக எக்ஸ் தளத்தில் டிஎம் (நேரடி மெசேஜ்) செய்யுங்கள் " என்று கூறியுள்ளது.

    ஆனால் இதனை கூட கிண்டல் செய்திருக்கிறார்கள் வெங்கட் பிரபுவின் ரசிகர்கள். உச்சகட்டமாக , இதனைதான் விஜய் நடித்தகோட் படத்திற்கும் சொன்னோம். ஏதாவது ரெஸ்பான்ஸ் செய்தாயா என்று கிண்டல் செய்திருக்கிறார் ஒரு ரசிகர். இன்னொரு ரசிகரோ, ஊரே கரெண்ட் இல்லாமல் அவதிப்படுகிறது.. உங்களுக்கு ஏசி இல்லை என்று கவலையா என்று கிண்டல் செய்திருக்கிறார்கள்.

    Advertisement

    English Summary

    Netizens have mocked Director Venkat Prabhu for posting that the AC service was poor.