திருச்சி, விருதுநகர் உள்பட 3 இடங்களில் சுத்துப்போட்ட என்ஐஏ அதிகாரிகள்.. அதிரடி சோதனை

  • சென்னை: தமிழகத்தின் மூன்று இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட 3 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். 20 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கேரளாவில் பதிவான வழக்கு ஒன்று தொடர்பாக கொச்சின் மண்டல அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    Advertisement

    நாட்டின் இறையாண்மைக்கு எதிரான செயல்கள், பயங்கரவாத குற்றங்கள் தொடர்பான சம்பவத்தை விசாரிக்கும் விசாரணை முகமையாக என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த அமைப்பின் அதிகாரிகள், இன்று திடீரென தமிழகத்தின் 3 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    Advertisement

    திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட 3 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். 20 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கேரளாவில் பதிவான வழக்கு ஒன்று தொடர்பாக கொச்சின் மண்டல அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. எனினும் இந்த திடீர் சோதனை எதற்காக என்ற விவரம் வெளியாகவில்லை.

    சோதனை முடிவுக்கு பிறகே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், எது தொடர்பான வழக்கு என்பது பற்றிய முழு தகவல்களும் வெளியிடப்படும் என்று என்.ஐ.ஏ வட்டாரங்கள் கூறுகின்றன. கேரளாவில் ஏதேனும் மாவோயிஸ்ட் தொடர்பான வழக்கா? அல்லது பயங்கரவாதம் தொடர்பான வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெறுகிறதா? என்று தெரியவில்லை. இன்று காலை முதலே நீடித்து வரும் என்.ஐ.ஏ சோதனையால் திருச்சி, விருதுநகர் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    முன்னதாக, நேற்று எல்லை தாண்டிய பயங்கரவாத சதித் திட்டம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் நான்கு மாநிலங்களில் உள்ள 12 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பீகார் மாநிலத்தின் கிஷன்கஞ்ச் பகுதியில் சோதனை மேற்கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள், 22 வயதுடைய இளைஞர் ஒருவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

    "டிரோன்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் வீசப்பட்டதாகக் கூறப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாத சதித் திட்டம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியிருந்தது.

    English Summary

    NIA Raid: The National Investigation Agency (NIA) has launched searches at three locations in Tamil Nadu, including Tiruchy and Virudhunagar. More than 20 officials are involved in the operation, which is linked to an investigation into a case registered in Kerala.