லாரி மேல பாருங்க சார்! எங்கடா இங்க இருந்த Reflectorsயை காணோம்! திண்டுக்கல்லில் வடஇந்தியர்கள் சேட்டை

  • திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் விபத்துகளை தடுக்க சாலை நடுவே உள்ள டிவைடரில் 'ரெஃப்லக்டர்' பொருத்தப்பட்டுள்ளது. இந்த ரெஃப்லக்டர்களை வடமாநில லாரி டிரைவர், கிளீனர்கள் பெயர்த்தி எடுத்து தங்களின் லாரிகளை அலங்கரித்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.

    Advertisement

    நம் மாநிலத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு தினமும் ஏராளமான லாரிகள் செல்கின்றன. அதேபோல் வடமாநிலங்களில் இருந்து நம் தமிழகத்துக்கு லாரிகள் வந்து செல்கின்றன. பெரும்பாலான லாரி டிரைவர்கள் தாங்கள் உண்டு.. தங்களின் பணி உண்டு என்று இருக்கிறார்கள்.

    Advertisement

    ஆனால் சில லாரி டிரைவர்கள் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தான் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

    அதாவது
    திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே தொட்டணம்பட்டி பகுதியில் இரவு நேரத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. இதனால் அந்த பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சாலையின் மத்தியில் உள்ள டிவைடரில் 'ரெஃப்லெக்டர்' பொருத்தப்பட்டன.

    இது லாரி உள்பட பிற வாகனங்களில் இருந்து வரும் ஒளியை உள்வாங்கி ஒளிரும். இதன்மூலம் 'டிவைடர்' இங்கே உள்ளது என்பதை டிரைவர்களுக்கு தெரிவிக்கும். இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்குவது தவிர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தொட்டணம்பட்டி பகுதியில் ஹரியானா பதிவெண் கொண்ட லாரி சென்றது.

    Advertisement

    லாரியில் சென்ற வட மாநிலத்தை சேர்ந்த டிரைவர், கிளீனர் ஆகியோர் சாலை மற்றும் டிவைடரில் பொருத்தப்பட்டு இருந்து 'ரெஃப்லெக்டர்'களை பெயர்த்து எடுத்தனர். விபத்து தடுப்புக்காக இருக்கும் 'ரெஃப்லெக்டர்'களை திருடுகிறோமே என்ற குற்ற உணர்ச்சி இல்லாமல் பட்டப்பகலில் யாருக்கும் அஞ்சாமல் அவர்கள் கைவரிசை காட்டினர்.

    அதன்பிறகு அந்த 'ரெஃப்லெக்டர்'களை அவர்கள் தங்களது லாரியின் பின்பகுதியில் பொருத்தி அலங்கரித்துள்ளனர். இதனை அந்த வழியாக சென்ற ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகி வேகமாக பரவி வருகிறது. பொருத்தியுள்ளனர். அந்த வழியே சென்ற நபர், அந்த காட்சியை வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    Advertisement

    இந்த வீடியோவை பார்ப்பவர்கள் 'ரெஃப்லெக்டர்'களை திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதோடு இந்த 'ரெஃப்லெக்டர்'கள் லாரி உள்பட அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் இரவில் பாதுகாப்பை தரும் வகையில் உள்ளது. அதனையும் வடஇந்திய லாரி டிரைவர், கிளீனர் திருடுகின்றனரே என்று பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

    English Summary

    To prevent nighttime accidents on the highway near Vedasandur in Dindigul district, reflectors were installed on the road median. However, lorry drivers and cleaners from northern states have been found removing these reflectors to decorate their vehicles. A video regarding this incident is currently circulating online.