சொந்தக்காரர் வீட்டுக்கு போனவருக்கு சோகம்..ஓட ஓட விரட்டி ஆசிரியர் படுகொ*? கழுத்தை அறுத்த கொடூரம்?

  • பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே அரசு பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வந்தவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது ஏற்படுத்தி உள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் மூன்று பேர் அவரை துரத்தி சென்றதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Advertisement

    அரியலூர் மாவட்டம், பெரிய திருகோணம் பகுதியைச் சேர்ந்தவர் ராமராஜ் இவரது மகன் புகழேந்தி (50) இவர் அரியலூர் மாவட்டம் கல்லகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    Advertisement

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பெரியம்மாபாளையம் சாலையில் உள்ள தனது உறவினர் ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான கோழிப்பண்ணைக்கு வந்துள்ளார். அப்போது கோழி பண்ணையில் புகழேந்தி கழுத்து அறுக்கபட்டு காயத்துடனும் இடது கையில் வெட்டு காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

    ஒரே நொடி.. காணாமல் போன பைக்.. மின்னல் வேகத்தில் நடந்த விபத்து.. உயிர் தப்பிய தூத்துக்குடி இளைஞர்!

    இதுகுறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடத்திய விசாரணையில் அரியலூரை சேர்ந்த சுந்தரம் மகன் மணிகண்டன் (35) குன்னம் கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் மகன் சிவசூரியா (30) மற்றும் அரியலூரை சேர்ந்த நவநீத கிருஷ்ணன் ஆகிய மூவரும் புகழேந்தியை கோழி பண்ணையில் துரத்தி கொண்டு சென்றதாக அதை பார்த்தவர்கள் போலீசில் தெரிவித்துள்ளனர்.

    Advertisement
    செல்போனால் வந்த வினை.. திருப்பூரில் கல்லூரி மாணவர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை! பிளஸ் டூ மாணவன் கைது

    அதன் பேரில் குன்னம் போலீசார் மணிகண்டன், சிவசூரியா நவநீதகிருஷ்ணன் ஆகிய மூவரையும் தேடி தீவிரமாக வருகின்றனர். ஓவிய ஆசிரியர் மர்மமான முறையில் குன்னத்தில் இறந்த கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆசிரியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English Summary

    A part-time art teacher was found dead with cut injuries at a poultry farm near Kunnam, Perambalur, as police search for three suspects.