ஓரினசேர்க்கை என்பது காட்டுமிராண்டித்தனம்.. துரைமுருகன் கருத்து!


நெல்லை: ஓரினசேர்க்கை என்பது காட்டுமிராண்டித்தனம் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஓரினச்சேர்க்கை சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரான இந்திய தண்டனை சட்ட பிரிவு 377ஐ நீக்கி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது. இதற்கு இந்தியா முழுக்க பலர் ஆதரவு அளித்தனர். சிலர் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நெல்லையில் நடந்த திருமண நிகழ்வு ஒன்றில் திமுக பொருளாளர் துரைமுருகன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், ஓரினசேர்க்கை என்பது காட்டுமிராண்டித்தனம். ஆணுக்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது ஒரு காட்டுமிராண்டித்தனமான நடைமுறை.

இந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு சட்டம் துணைபோகிறது. இந்த சட்டத்திற்கு மக்கள் சிலரும் துணையாக உள்ளனர் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டம் நீக்கப்பட்டதற்கு திமுகவை சேர்ந்த கனிமொழி, நடிகை அனுஷ்கா சர்மா, அமீர்கான், காங்கிரசை சேர்ந்த குஷ்பு ஆகியோர் வரவேற்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Have a great day!
Read more...

English Summary

Section 377: DMK Duraimurugan talks against Homosexuality in Nellai.