‘சிங்கப் பெண்’ சிறப்பு பிரிவினருக்கு தனி லோகோவுடன் கூடிய பிரத்யேக சீருடை?

  • சென்னை: தமிழக காவல் துறையில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தவெக அரசால் உருவாக்கப்பட்டுள்ள 'சிங்கப்பெண்' (Singapadai) சிறப்பு பிரிவினருக்கு, தனித்துவமான லோகோ (Logo) மற்றும் பிரத்யேக புதிய சீருடை தயாராகி வருவதாகத் துறை சார்ந்த உள்விவரங்கள் அறிந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    பாதுகாப்புப் பணியில் சர்வதேச தரத்திற்கு இணையாக இந்த சிறப்புப் படையை மேம்படுத்தும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    Advertisement

    தற்போது காவல் துறையில் உள்ள மற்ற பிரிவுகளில் இருந்து 'சிங்கப் பெண்' பிரிவினரைத் தனியாக அடையாளம் காட்டும் வகையில் இந்த சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது.

    தனித்துவமான லோகோ: படையின் வீரம், வேகம் மற்றும் விவேகத்தைக் குறிக்கும் வகையில் "கம்பீரமான சிங்கத்தின் முகம்" பொறிக்கப்பட்ட பிரத்யேக லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சீருடையின் தோள்பட்டை மற்றும் தொப்பிகளில் இடம்பெறவுள்ளது.

    நவீன சீருடை நிறம் மற்றும் தரம்: வழக்கமான காக்கி நிற உடைகளுக்குப் பதிலாக, நவீன உத்திகளுக்கு ஏற்ற வகையிலும், இரவு மற்றும் பகல் நேரப் பணிகளுக்கு ஏதுவாகவும் இருக்கும் வகையில் கமாண்டோ பாணி வண்ணத்தில் (Camouflage/Tactical pattern) இந்த சீருடை அமையவுள்ளது.

    Advertisement

    உயர் ரக துணி: கடுமையான காலநிலையிலும், ஆபத்தான களப்பணிகளிலும் வீரர்கள் சுறுசுறுப்பாகச் செயல்பட ஏதுவாக, இலகுவான மற்றும் அதே நேரத்தில் கிழியாத 'ரிப்-ஸ்டாப்' (Rip-stop) ரக துணிகள் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

    உபகரணங்களும் மாற்றியமைப்பு

    புதிய சீருடையுடன் சேர்த்து, வீரர்களின் பாதுகாப்பு உபகரணங்களும் நவீனப்படுத்தப்பட உள்ளன.

    "சிங்கப்பெண் வீரர்களுக்கு இலகுரக ஹெல்மெட்டுகள், அதிநவீன தற்காப்புக் கவசங்கள் (Tactical Vests) மற்றும் அதிநவீனத் துப்பாக்கிகளை எளிதாகக் கையாளும் வகையிலான பெல்ட்டுகள் (Tactical Belts) வழங்கப்பட உள்ளன.

    இது அவர்களின் செயல்பாட்டுத் திறனை பல மடங்கு அதிகரிக்கும்," என்று காவல்துறை உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    விரைவில் அதிகாரப்பூர்வ அறிமுகம்

    இந்த புதிய சீருடை மற்றும் லோகோவிற்கான இறுதி ஒப்புதல் தற்போது உயர்மட்ட அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

    தமிழக முதல்வர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குனர் (DGP) முன்னிலையில் நடத்தப்படவுள்ள சிறப்பு விழாவில், இந்த 'சிங்கப் பெண்' பிரிவினரின் புதிய சீருடை மற்றும் இலச்சினை (Logo) அதிகாரப்பூர்வமாக மாநில மக்களுக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    காவல்துறையை நவீனமயமாக்கும் அரசின் இந்த முயற்சி, பாதுகாப்புப் படையினரின் மனவலிமையையும் கம்பீரத்தையும் மேலும் உயர்த்தும் எனப் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், குற்றங்கள் நடந்து வருகின்றன. இதை தடுக்கு தவெக அரசு அமைந்தால் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை அமைக்கப்படும் என விஜய் தெரிவித்திருந்தார். அந்த வகையில் அவர் ஆட்சிக்கு வந்ததும் இந்த படையை அமைத்து தனது முதல் கையெழுத்தாக போட்டிருந்தார்.

    Advertisement

    இந்த படையின் ஐஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம் எங்கும் இந்த அதிரடி படைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    English Summary

    The Tamil Nadu Police is reportedly preparing a dedicated ‘Singapadai' special wing under the Tamilaga Vettri Kazhagam government to curb crimes against women and children. Officials say the new unit will feature a unique logo and a specially designed uniform aimed at creating a distinct identity for the force.