பிறக்கும் போதே இதயக்கோளாறோடு பிறந்த குழந்தை.. அறுவை சிகிச்சைக்கு உதவுங்கள்!


சென்னை: தன் கணவராலும் அவரின் குடும்பத்தாரால் கைவிடப்பட்ட நிலையிலும் தன் குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்காக தனியாளாக நின்று போராடி வருகிற இந்த பெண்ணுக்கு உதவுங்கள்.

இந்த சமுதாயம் அவளை நிம்மதியாக வாழ விடவில்லை. அவளின் மாமியாரும் உறவினர்கள் என்று யாரும் அவளுக்கு உதவவில்லை. இந்த சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டுள்ளார். அவளின் வலி அவளை ஒரு நாள் கூட நிம்மதியாக உறங்கவிடவில்லை.

அங்கிதா தன் குடும்பத்தாலே பாதிக்கப்பட்டார். அவள் திருமணம் செய்து கொண்ட நாளிலிருந்து அவளுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளைச் சகித்துக் கொண்டே தான் வாழ்ந்து வந்தார்.

அவள் தொடர்ந்து கஷ்டங்களை அனுபவித்து வந்தாலும் அவள் ஒருபோதும் அவளது நம்பிக்கையும் தைரியத்தையும் விடவில்லை.

கண்டிப்பாக ஒரு நாள் இந்த பிரச்சினைகள் எல்லாம் முடிவுக்கு வரும் என நம்பினாள். அவள் கர்ப்பம் அடைந்தபிறகு தன் நிலைமை மாறிவிடும், சந்தோஷமாக இருக்கும் என எண்ணினாள். ஆனால் அவளது நிலைமை இன்னும் மோசமாகியது.

"எனது கணவரும் என் குடும்பத்தாரும் இந்த செய்தியை கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சியும் என் பலமும் உறுதுணையும் என்னைவிட்டு போகும் நேரம் என்று எனக்கு தெரியாது." என்கிறார் அங்கிதா.

5 மாத கர்ப்ப காலத்தில் வழக்கமான செக்கப் செய்யச் சென்றிருந்தார் அங்கிதா. அப்பொழுது வயிற்றில் வளரும் குழந்தையை ஸ்கேன் செய்து பார்க்கும்போது தான் தெரிந்தது குழந்தைக்கு பிறக்கும்போதே இதயக் கோளாறு இருப்பது தெரிய வந்தது. ஆனால் அப்பொழுது என் கணவரிடமும் அவரின் குடும்பத்தாரிடமும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால் என் குழந்தை அப்ராஜிதா பிறந்த உடன் அவர்களின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளும் மாறத் தொடங்கியது. பிறந்தது பெண் குழந்தை என்பதால் அவர்களுக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் அவள் இதயக் கோளாறுடன் பிறந்ததால் சிகிச்சைக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருந்தது.

அவள் என்னுடைய மகள். அவளுக்காக இந்த உலகத்தை எதிர்க்கவும் தயாராக இருக்கிறேன். என் மாமியாரும் என் கணவருக்கும் நாங்கள் இருவரும் வேண்டாதவர்கள் ஆகிவிட்டோம். அவர்களால் கைவிடப்பட்டேன். அவர்கள் என் குழந்தைக்கு செய்த குற்றம் ஒருபோதும் மன்னிக்க முடியாதது. யாரும் இல்லாத அநாதைகளாக ஆகிவிட்டோம். இருப்பினும் என் குழந்தைக்கு நான் இருக்கிறேன். தனியாளாக அவள் உயிரைக் காப்பாற்றப் போராட முடிவெடுத்தேன். என்னுடைய தைரியம் மட்டுமே அவளுடைய மறு வாழ்க்கைகான வழி என்று புறப்பட்டேன். இப்பொழுது நான் என் பெற்றோருடன் வந்துவிட்டேன்.

குழந்தையைத் தூக்கிக் கொண்டு வீடும் மருத்துவமனையும் என்று அலைவதே அவளுக்கு வாடிக்கையாகிவிட்டது. அவளுடைய செல்லக் குழந்தையைக் காப்பாற்ற சிகிச்சைக்காக 1 லட்சம் ரூபாய் வரை அவர் செலவழித்து விட்டார்.அவருடைய பிஞ்சு குழந்தை ரொம்ப நாட்களாக குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த குழந்தைக்கான சிகிச்சை முழுவதையும் தனி ஆளாக நின்று பொறுப்பேற்று வருகிறார். அவளுடைய பெற்றோர்களுக்கும் வயதாகிவிட்டதால் அவளுடன் மருத்துவமனையில் அவர்கள் தங்கக் கூட முடியவில்லை. இவள் மட்டும் தனியாளாக இருந்து தன் குழந்தையை இரவு பகல் பாராமல் பார்த்து வருகிறார். அப்ராஜிதா நிலைமை தற்போது மோசமான நிலையில் உள்ளது. வேறு வழி இல்லாமல் அவர் தற்போது நம்முடைய உதவியை நாடி வந்துள்ளார்.

அப்ராஜிதா தற்போது மூச்சுவிடக் கூட சிரமப்பட்டு வருகிறார். வேதனைக்கு அழக்கூட முடியாமல் உடலில் போதுமான ஆற்றல் இல்லாமல் அந்த பிஞ்சு குழந்தை படுத்த படுக்கையாக இருக்கிறது. சாப்பிடக்கூட முடியவில்லை. குழந்தையைக் காப்பாற்ற ஒரே வழி இதய அறுவை சிகிச்சையை உடனடியாக செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இதய அறுவை சிகிச்சைக்காக 3.5 லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது. நான் தனி ஒரு தாயாக நின்று என் குழந்தையைக் காப்பாற்றப் போராடி வருகிறேன். இந்த பெரிய தொகையைத் திரட்ட எனக்கு நீண்ட காலங்கள் ஆகும். அதுவரை என் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் அவள் உயிரைக் காப்பாற்ற முடியாது. எனக்கு உறுதுணையாக இருப்பது இவள் மட்டுமே. இவள் இல்லாமல் நான் அநாதை ஆகிவிடுவேன். என் கணவரும் என்னைக் கைவிட்டு விட்டார். ஒவ்வொரு முறையும் மனம் உடைந்து விட்டேன். இனி என்னிடம் இருப்பது என் தைரியமும், நம்பிக்கையையும், என் குழந்தையும் தான். உங்களுடைய மனிதநேயக் கரங்கள் மட்டுமே அப்ராஜிதா வாழ்வை நீண்ட தூரத்திற்குக் கொண்டு செல்லும் என நான் நம்புகிறேன். உங்கள் கருணை என் குழந்தையின் சிகிச்சைக்கு மருந்தாகட்டும்.

மனிதநேயத்துடன் ஒன்றுபட்டு ஒரு தாயின் சுமைக்குக் கை கொடுப்போம். நாம் ஈட்டும் உதவிக்கரங்கள் ஒரு தாயின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமையட்டும். கடவுளுடன் சேர்ந்து நாமும் அந்த குழந்தையைக் காப்பாற்றப் போராடுவோம். உங்களின் சிறு உதவி இந்த குழந்தையின் உயிருக்கு வலிமை சேர்க்கட்டும்.

வாருங்கள் உயிர் காக்க உதவி செய்வோம் மனிதநேயத்துடன்.

Have a great day!
Read more...

English Summary

After being abandoned by her husband’s family for giving birth to a girl child, Ankita was distraught. Things got worse when she realized that she had to fund her newborn’s open heart surgery all by herself.