டாக்டர் கனவில் கனிமொழி.. கையிலோ பணமில்லை.. காட்டு வேலை செய்யும் பரிதாபம்.. உதவுங்கள் மக்களே


சென்னை: டாக்டர் படிப்பு முடிக்க இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில், எங்கே படிப்பை முழுவதுமாக முடிக்க முடியாமல் போய்விடுமோ என்று மாணவி ஒருவர் கண்ணீர் வடிக்கிறார்.

பிளஸ் 2 படித்துவிட்டு டாக்டர் ஆகணும்னு கனவு காணும் அனைவருக்கும் எம்பிபிஎஸ் சீட் கிடைத்துவிடுவதில்லை. அதனால் முடிந்த வரை முயற்சி செய்து பார்த்துவிட்டு கடைசியில் கிடைத்த கோர்ஸ்-ஐ வேண்டா வெறுப்பாக படித்துவிட்டு வெளியே வரும் மாணவர்கள்தான் நிறைய உண்டு.

ஏழை விவசாயி மகள்

இந்த நிலையில் ஒரு மாணவி படிப்பை ஆரம்பித்து இப்போது முடிப்பதற்கு கையில் பணம் இல்லாமல் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. கனிமொழி என்ற மாணவி, பிளஸ் 2-ல் 1127 மார்க் எடுத்து, தனலட்சுமி ஸ்ரீநிவாசன் என்ற தனியார் மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். இது அவருக்கு 4-ம் வருடம். ஆனால் இன்னும் ஒரு வருடத்தை முடிக்க கையில் பணம் இல்லை என்று அவரது தகப்பனார் பிச்சுமணி சொல்கிறார். காரணம் அவர் ஒரு ஏழை விவசாயி என்பதுதான்.

ஒன் இந்தியாவுக்கு பேட்டி

இதுகுறித்து பிச்சுமணி "ஒன் இந்தியா தமிழ்"-க்கு அளித்த பேட்டியில் கூறும்போது, "எனக்கு 2 மகள்கள். கனிமொழிதான் எங்கள் மூத்த மகள். எனக்கு ஆரம்பத்திலிருந்தே விவசாயம்தான் தொழில். அதுவும் பெரிசா இல்லை. இருப்பது ஒரு ஏக்கர் நிலம்தான். அதில்தான் என் குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன்.

வேண்டுகோள்

இப்போது கனிமொழிக்கு இது 4-வது வருடம். ஆனால் அவள் படிப்புக்கு பணம் போதவில்லை. அதனால் சனி, ஞாயிறு இரண்டு நாளும் காலேஜ் லீவு என்பதால், அந்த நாட்களில் எங்களுடன் சேர்ந்து காட்டுவேலையை அதாவது விவசாயத்தை பார்த்து உதவி வருகிறார். மிச்சமிருக்கும் ஒரு வருட படிப்பிற்கு யாராவது உதவி செய்தால் நன்றாக இருக்கும்" என்று வேதனை கலந்த வேண்டுகோளுடன் சொல்லி முடிக்கிறார் பிச்சுமணி.

கரை சேர்க்க வேண்டும்

நீட் தேர்வில் எத்தனையோ பிள்ளைகள் நம் தமிழகத்தில் மாண்டு வரும் நிலையில், முக்கால் கிணறு தாண்டிவிட்ட கனிமொழிக்கு யாராவது உதவுவார்களா? விவசாய குடும்பத்திலிருந்து போராடி, கூலி வேலை பார்த்து தன் படிப்பை தொடர நினைக்கும் இந்த எதிர்கால டாக்டரை கரை சேர்த்துவிட யாராவது முன்வருவார்களா?

உதவி புரிய விரும்புவோருக்காக:

P. Kanimozhi,

D/O Pitchaimani
3/222 Ambedkar Nagar
Veppanthattai
Veppanthattai (p.o)&( t.k)
Perambalur (d.t)

Pin: 621 116

P.Kanimozhi
State bank of india
Venkatesapuram branch
Perambalur
A/C no: 37136757510
IFSC: SBIN0000796
MICR: 621002002

Have a great day!
Read more...

English Summary

Student Kanimizhi is suffering from the study of Medicine