அமைச்சரவையில் அதிரடி என்ட்ரி.. அமைச்சராகப் பதவியேற்ற வன்னி அரசு, ஷாஜகான்!

  • சென்னை: தமிழக அரசியலில் முக்கிய கவனம் பெற்றுள்ள அமைச்சரவை விரிவாக்கத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஷாஜகான் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னி அரசு ஆகியோர் கவர்னர் மாளிகையில் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

    Advertisement

    தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படும் அமைச்சரவை விரிவாக்கம் நேற்று நடைபெற்றது. முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் தற்போது மொத்தம் 33 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். அதேசமயம் தவெக பெரும்பான்மைக்கு ஆதரவு அளித்த கட்சிகளுக்கும் அமைச்சரவை பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் மேலும் 2 அமைச்சர்கள் விரைவில் இணைக்கப்படுவார்கள் என ஏற்கனவே அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வந்தன.

    Advertisement

    அதன்படி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவற்றுக்கு தலா ஒரு அமைச்சரவை இடம் வழங்க முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளார். இந்த முடிவு அக்கட்சிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கூட்டணி உறவை வலுப்படுத்தும் அரசியல் நடவடிக்கையாகவும் இது பார்க்கப்படுகிறது.

    நேற்று நடைபெற்ற ஆலோசனைகளின் போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அமைச்சரவையில் இணைய அதிகாரப்பூர்வ ஒப்புதலை முதல்வர் விஜய்யிடம் வழங்கியுள்ளது. அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தங்களது ஒப்புதல் கடிதத்தை சமர்ப்பித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் இரண்டு கட்சிகளும் தமிழக ஆட்சியில் நேரடி பங்கெடுக்க உள்ளன.

    Advertisement

    இதையடுத்து, புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு சென்னை கவர்னர் மாளிகையில் நடைபெற்றது. இந்த விழாவில் மாநில அரசின் முக்கிய நிர்வாக அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் ஷாஜகான், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னிஅரசு ஆகியோர் த.வெ.க. அரசில் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு கவர்னர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிய அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் நலத்துறையும், வன்னி அரசுக்கு சமூக நீதித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Tamil Nadu Cabinet Expansion: Tamil Nadu Chief Minister Vijay has decided to include representatives from alliance parties in the state cabinet. IUML’s Shahjahan and VCK’s Vanni Arasu are expected to take oath as ministers today at the Governor House in Chennai.