திருமங்கலம் ஃபார்முலாவா? 1 ரூபாய்கூட கொடுக்கல.. ஆனாலும் லட்சம் ஓட்டு வித்தியாசம்.. விஜய் பாலாஜி அதிரடி

  • சென்னை: தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக முன்னிலை பெற்றுள்ள நிலையில், திமுக, அதிமுகவின் கோட்டைகளை மக்கள் சக்தியால் உடைப்போம் என்று அமைச்சர் விஜய் பாலாஜி நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.. ஆளும் கட்சியாக இருந்தாலும் பணம் கொடுக்காமல் வெற்றி பெறுவோம் என்ற அவரது பேச்சு இப்போது கவனம் பெற்றுள்ளது.

    Advertisement

    2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சத்தியபாமா, பிறகு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால் தாராபுரம் தொகுதி காலியானது. இதையடுத்து அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் தவெக, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. இதேபோல் மதுராந்தகம் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

    Advertisement

    திருமங்கலம் ஃபார்முலா

    கடந்த பொதுத்தேர்தலில் தாராபுரத்தில் தவெக 3வது இடத்தில்தான் இருந்தது.. ஆனால் இப்போது நடைபெறும் இடைத்தேர்தலில் தவெக முன்னிலை பெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆட்சி அமைத்த பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால், இந்தத் தேர்தல் தவெகவுக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

    2 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர் இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் 3 இடத்திலும் உள்ளனர். இதையொட்டி இரு தொகுதிகளிலும் தவெக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாக காணப்படுகின்றனர்.

    சத்தியபாமா விரட்டியடிக்கப்பட்ட தாராபுரம் சின்னபுதூர் கிராமத்தில் தவெக சாதனை.. மிரண்ட அதிமுக, திமுக
    Advertisement

    அமைச்சர் விஜய் பாலாஜி அதிரடி

    இந்தச் சூழலில் பேசிய கைத்தறி மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி, கடந்த தேர்தலில் மக்கள் பொய் பிரச்சாரங்களை நம்பி வாக்களித்து விட்டார்கள்.. இப்போது அந்த நிலை மாறியுள்ளது.. அதிமுக, திமுக ஆகிய கட்சிகளைப் புறக்கணித்துவிட்டு மக்கள் தவெகவை ஏற்றுக்கொள்ளத் தொடங்கி விட்டார்கள்..

    கடந்த தேர்தலில் 3வது இடத்தில் இருந்த தவெக, இப்போது முதலிடத்துக்கு வந்துள்ளது.. நகர்ப்புறப் பகுதிகளின் வாக்குகள் எண்ணப்படும்போது இந்த மாற்றம் இன்னும் தெளிவாகத் தெரியும்.. திமுக, அதிமுகவின் பாரம்பரிய கோட்டைகளை மக்கள் சக்தியால் உடைப்போம்..

    நொந்து போச்சா திமுக? அதிமுக, கம்யூனிஸ்ட் ஆபீஸில் காலி சேர்கள்.. டக்னு பனையூர் வந்த பிரபலம் யாருங்க
    Advertisement

    திருமங்கலம் ஃபார்முலாவா

    தவெக பணம் கொடுத்து வாக்குகளை வாங்கியதாக விமர்சனங்கள் வருகின்றன.. அதை நாங்கள் மறுக்கிறோம்.. இடைத்தேர்தல் என்றாலே திருமங்கலம் ஃபார்முலா பற்றிப் பலரும் பேசுவார்கள்.. ஆனால், இந்த முறை ஆளும் கட்சியாக இருந்தபோதிலும் ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்காமல் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம்... தாராபுரத்தில் தவெக கூட்டணி ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்..

    தவெகவுக்கு வந்த அதிமுக ஓட்டுகள்.. ஷாஜகான் ஏன் இவ்வளவு ஹேப்பி? திமுகவுக்கு என்ன சொல்றார் பாருங்க?

    அமைச்சர் ஷாஜகான்

    அதேபோல அமைச்சர் ஷாஜகான் செய்தியாளர்களிடம் பேசும்போதும், இதே பணப்பட்டுவாடா குறித்த விமர்சனங்களை மறுத்தார்.. "தவெக ஆட்சிக்கு எதிராக அடிப்படை ஆதாரம் இல்லாமல் குதிரை பேரம் என்று அவதூறு பரப்பினார்கள். ஆனால், அந்த அவதூறுகள் முறியடிக்கப்பட்டுள்ளன. மக்களின் வாக்குகள்தான் உண்மையான தீர்ப்பு என்பதை இந்த இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன..

    Advertisement

    ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே மக்கள் ஆதரவை உறுதிப்படுத்தும் வகையில் இந்த வாக்கு எண்ணிக்கை அமைந்து வருகிறது.. குதிரை பேரம் குற்றச்சாட்டுகளை மறுத்து, மக்களின் வாக்குகள் தான் உண்மையான தீர்ப்பு.. அதிமுகவின் வாக்குகள் தவெகவுக்கு சென்றுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் வெற்றியை நோக்கி முன்னேறி வருவது அதைவிட மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்..

    இன்னும் சற்று நேரத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், தவெக அமைச்சர்களின் இந்தப் பேச்சுக்கள் கவனம் பெற்றுள்ளன...!!

    English Summary

    Thirumangalam Formula? TVK Minister Vijay Balaji Claims 1 Lakh Vote Margin Without Paying a Rupee in Dharapuram