திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா தினத்தில் பக்தர்கள் மலை ஏற தடை


திருவண்ணாமலை: கார்திகை தீப விழா அன்று பக்தர்கள் மலை மீது ஏற தடை விதிப்பததென்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியாக சிவன் திருவண்ணாமலையில் வீற்றிருப்பதாக ஐதீகம். கார்த்திகை தீப திருநாளில் திருவண்ணாமலையிலுள்ள மலை மீது ராட்சத கொப்பரையில் டன் கணக்கில் நெய் ஊற்றி ஏராளமான வேட்டிகளை திரியாக இணைத்து தீபம் ஏற்படும். இந்த தீபமானது காற்று, மழை வந்தாலும் அணையாமல் அப்படியே இருப்பது சிவனின் அருளால் என்பது ஐதீகம்.

திருவண்ணாமலையில் அத்தகைய சிறப்பு வாய்ந்த தீபத் திருநாளை காண பக்தர்கள் அதிகாலை முதற்கொண்டே மலையேறி காத்துக் கொண்டிருப்பர். இதையடுத்து மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்படும். இந்நிலையில் மலையேறும் பக்தர்களுக்கு போதிய பாதிகாப்பு அளிக்க முடியாத சூழல் இருப்பதால் மலையேறி சென்று தீபத்தை பார்க்க கடந்த ஆண்டு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இதேபோல இந்த ஆண்டும் மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Thiruvannamalai district administration bans to see the Deepam function by climbing in the mountain as a precautionary measure.