தூத்துக்குடியில் ராக்கெட் வேகத்தில் எகிறிய மீன் விலை.. சீலா மீன் ரேட்டை பாருங்க! அம்மாடியோவ்!

  • தூத்துக்குடி: குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்டது என்பதால்தான் பெரும்பாலான மக்கள் மீன்களை விரும்புகின்றனர். ஆனால், இன்று மீன் ரேட்டை கேட்டா தலை சுற்றிவிடும் போல இருக்கிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

    Advertisement

    ஞாயிற்றுக்கிழமை என்றாலே கறி சோறுக்கு நேர்ந்துவிடப்பட்ட நாள் அது. சரி ஆசையா மீன் வாங்க போலாம்னு பார்த்தா.. ரேட்டை கேட்டு ஆடி போயிட்டேன். காசிமேட்டில் எதிர்பார்த்த அளவுக்கு மீன் இல்லை. ரேட்டும் ஓவர். சரி இங்கதான் அப்படின்னு பார்த்தா.. தூத்துக்குடியிலும் இதே நிலைமைதான்.

    Advertisement

    திரேஸ்புரம் மீன் மார்க்கெட்டில் ஒரு கிலோ சீலா மீன் ரூ.1,600 வரை விற்பனையாகிறது. இதென்ன ஒவர் நைட்டில் சீலா மீனுக்கு வந்த வாழ்வு என்று பலரும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர். சீலா சொல்லிக்கொள்ளும் அளவுக்கு டேஸ்டாக இருக்காது. குறிப்பிட்ட சிலர்தான் இந்த மீனை விரும்பி வாங்குவார்கள். அதிலும் மத்தியுடன் இந்த மீன் விற்பனைக்கு வந்தால் மத்திக்குதான் அதிக டிமாண்ட் இருக்கும். இருந்தும் கூட சீலா மீனுக்கு இவ்வளவு ரேட் எகிறியிருப்பது ஓவர்தான் என்று மக்கள் புலம்புகிறார்கள்.

    அதேபோல, பாறை மீன் ரூ.550க்கு விற்பனையாகிறது. மீன்களிலேயே முள் அதிகம் இல்லாத மீன் எனில் இந்த பாறைதான். டேஸ்ட் கொஞ்சம் சப்புனு இருந்தாலும், குழந்தைகளுக்கு மீன் பழகும்போது பாறையை வாங்கி தரலாம். ஆனால், கிலோ ரூ.550 என்று விற்பதால்.. கம்முன்னு பிராய்லர் கோழி முக்கால் கிலோ வாங்கிட்டு போயிடலாம்னு தோணும்.

    Advertisement

    அதேபோல சாளை மீன்.. அதாவது நம்மூரில் மத்தி மீன் என்று சொல்லுவாங்களே அது கூடை ரூ.2000 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கூடையே இவ்வளவு விலை விற்பதால், அதை வாங்கி தெருக்களில் வியாபரம் செய்யும் சில்லறை வியாபாரிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

    காரணம் இதுதான்

    மீன்பிடி தடைக்காலம்தான் இந்த விலை ஏற்றத்திற்கு காரணம். கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் 15 தொடங்கி, ஜூன் 14 வரை மொத்தம் 61 நாட்கள் மீன் பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

    இந்தத் தடை ஆழ்கடலில் மீன்பிடிக்கும் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், நாட்டு படகுகளில் சென்று மீன்பிடிப்பவர்கள் கொண்டு வரும் குறைந்த அளவிலான மீன்களுக்கு டிமாண்ட் அதிகமாக இருக்கிறது. இதுதான் இந்த விலை ஏற்றத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

    English Summary

    Thoothukudi Fish Prices: Most people prefer fish because it is highly nutritious yet affordable. However, the current prices are enough to make one's head spin, and people have been severely affected by this.