திருவண்ணாமலை சிறுமிக்கு ஓடும் லாரியில் நடந்த கொடூரம்.. கூட்டு பலாத்காரம்.. டிரைவர், கிளினீர் உள்பட 3 பேர் கைது

  • திருவண்ணாமலை: திருவண்ணாமலையை சேர்ந்த சிறுமியை ஓடும் லாரியில் மாறி மாறி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த டிரைவர் மற்றும் கிளீனர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆற்காடில் இருந்து பெங்களூர் செல்லும் வரை சிறுமியை பலாத்காரம் செய்து இருக்கிறார்கள். மேலும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.

    ஓடும் லாரியில் வைத்து 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வந்தவாசி அருகே தர்காவிற்கு வந்த 14 வயது சிறுமியை இரண்டு பேர் ஆசை வார்த்தை கூறி ஓடும் லாரியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கணவன் மனைவி உள்ளிட்ட 3 பேர் கைது.

    திருவண்ணாமலை சிறுமி

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் சைதானி பீவி தர்காவிற்கு வந்த 14 வயது சிறுமியிடம் இரண்டு பேர் ஆசை வார்த்தை கூறி லாரியில் அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். டிரைவர், கிளீனர் இருவரும் சிறுமியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ய உடந்தையாக இருந்த டிரைவரின் மனைவி ஆகிய மூன்று பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. தாய் மற்றும் தந்தையுடன் வசித்து வந்தார். மாதம்தோறும் இவர்கள் வந்தவாசி சேத்துப்பட்டு சாலையில் உள்ள சைதானி பீவி தர்காவிற்கு சென்று வருவதை வாடிக்கையாக கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் சிறுமியின் தாய், தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

    கூட்டு பாலியல் வன்கொடுமை

    இதனால் அவர்கள் குடும்பத்துடன் தர்காவில் தங்கி இருந்தனர். அப்போது தர்கா வந்திருந்த, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த பாத்திமா (30) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. தர்காவில் இருக்கும் போது இவர்கள் அனைவரும் ஒன்றாக பேசி வந்துள்ளனர். இந்த நேரத்தில் சிறுமி பெங்களூரில் இருக்கின்ற உறவினர் வீட்டுக்கு செல்ல இருந்துள்ளார். அப்போது பாத்திமா நாங்கள் அந்த வழியாக தான் போகிறோம் வேண்டும் என்றால் என்னுடன் வா.. என ஆசை வார்த்தை கூறி அழைத்துள்ளார்.

    சிறுமியின் தாய், தந்தைக்கும் உடல்நிலை சரியில்லாததால் பாத்திமாவை நம்பி அவருடன் சிறுமியை அனுப்பி வைத்துள்ளார். பின்னர் ஆற்காடில் இருந்து பெங்களூருக்கு பாத்திமாவின் கணவர் இம்ரான் பாஷா (35) மற்றும் அவரது தம்பியான கிளீனர் அஜ்மல் பாஷா (30) ஆகிய இரண்டு பேரும் 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி லாரியில் அழைத்து சென்றுள்ளார்.

    அப்போது ஓடும் லாரியில் பெங்களூர் செல்லும் வரை கொடூர புத்தி கொண்ட 2 பேரும் மாறி மாறி சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பெங்களூர் அருகே இடையில் லாரி நின்றதில், அங்கு கூடியிருந்த மக்களிடம் சென்று தனக்கு நடந்த கொடுமையை சிறுமி கூறியிருக்கிறாள். அதன்பின்னர், பொதுமக்கள் 2 பேருக்கும் தர்ம அடி கொடுத்து, பெங்களூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    பாத்திமாவும் கைது

    இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்ததோடு, சிறுமியை மீட்டு மகளிர் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைத்தனர். தொடந்து வந்தவாசி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வந்தவாசி போலீசார் சிறுமியை அழைத்து சென்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இம்ரான் பாஷா மற்றும் அவரது தம்பி அஜ்மல் பாஷாவிடம் சிறுமியை அழைத்து செல்வதற்கு உடந்தையாக இருந்த இம்ரான் பாஷாவின் மனைவி பாத்திமாவையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    English Summary

    Tiruvannamalai Minor Girl: Police have arrested three people, including a lorry driver and cleaner, for allegedly gang sexually assaulting a minor girl from Tiruvannamalai inside a moving truck. A woman accused of assisting the crime has also been taken into custody.