விஜய் அமைச்சரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு என்னென்ன துறைகள்? சுற்றுலா, உயர்கல்வித்துறையா?

  • சென்னை: விஜய்யின் அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், அது என்னென்ன துறைகள் என்ற விவரம் கசிந்திருக்கிறது. இதன்படி கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ்குமாருக்கு சுற்றுலாத்துறையும், மேலூர் தொகுதி எம்.எல்.ஏ பெ விஸ்வநாதனுக்கு உயர்கல்வித்துறையும் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    Advertisement

    தமிழக முதல்வராக விஜய் கடந்த 10 ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். அவருடன் செங்கோட்டையன், புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். முதல்வர் விஜய் உள்பட 10 அமைச்சர்களுக்கும் கடந்த 16 ஆம் தேதியன்று துறைகள் ஒதுக்கப்பட்டன.

    Advertisement

    எனினும் வனத்துறை, வேளாண்மை, உயர்கல்வித்துறை, வருவாய், வீட்டுவசதி, கூட்டுறவு, குறு சிறு நடுத்தர தொழில்கள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சர்கள் நியமனம் இன்னும் நடக்கவில்லை. இதையடுத்து தமிழக அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் கேபினட்டில் இடம் பெற வேண்டும் என்று விஜய் விரும்பினார். முதல் கட்டமாக காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெறுவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அக்கட்சி சார்பில் வென்ற மேலூர் தொகுதி எம்.எல்.ஏ விஸ்வநாதன் மற்றும் கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ்குமாருக்கு அமைச்சராக உள்ளனர்.

    Advertisement

    இதனை காங்கிரஸ் மேலிடம் உறுதி செய்தது. காங்கிரஸ் அமைச்சர்களான ராஜேஷ்குமார் மற்றும் விஸ்வநாதனுக்கு முறையே உயர்கல்வி மற்றும் சுற்றுலா துறை ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதாவது ராஜேஷ்குமார் சட்டப்படிப்பு முடித்தவர் ஆவார். மேலும் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு சுற்றுல்லாத்துறையை ஒதுக்க விஜய் முன்வந்துள்ளார்.

    இதே போல் முன்னாள் எம்பியாக நாடாளுமன்றத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியவரும், சென்னை மெட்ராஸ் பல்கலைக்கழ்கத்தில் பிஏ பட்டம் முடித்தவர் என்பதாலும் இவருக்கு உயர் கல்வித்துறையை விஜய் ஒதுக்க முன்வந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்ததே மகிழ்ச்சிதான். அதே நேரம் விஜய் எந்த துறைகளை எங்களுக்கு ஒதுக்கினாலும் சந்தோஷம். மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வோம் என்று கூறினார்.

    Advertisement

    தவெக தலைவர் விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே எங்களுடன் கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று சொல்லி வந்தார். ஆனால் தேர்தலுக்கு முந்தைய நேரம் வரை யாரும் தவெகவுடன் கூட்டணிக்கு வைக்கவில்லை. இதனால் விஜய் தனித்தே களம் காணும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
    தேர்தல் ரிசல்ட்டுக்கு பிறகு விஜய்யின் தவெக தனித்தே 108 தொகுதிகளில் வெற்றி மிகப்பெரிய வரலாறு படைத்தது. எனினும் பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயுஎம்.எல் கட்சிகள் ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைத்துள்ளார். இந்த நிலையில் தான் ஆட்சி அமைக்க உதவிய கட்சிகளுக்கு ஆடியில் பங்கு கொடுக்க விஜய் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதில் காங்கிரசுக்கு இரண்டு அமைச்சர்கள் உறுதியாகிவிட்ட சூழலில், விசிக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் நாளை முடிவை தெரிவிப்பதாக கூறியுள்ளன. அதே நேரம் சிபிஐ, சிபிஎம் அமைச்சரவையில் இடம் இல்லை என உறுதியாக தெரிவித்துவிட்டன.

    English Summary

    Congress is expected to receive two portfolios in Chief Minister Vijay’s cabinet expansion. Killiyoor MLA Rajesh Kumar is likely to get the Tourism Department, while Melur MLA P. Viswanathan may be assigned the Higher Education portfolio, according to emerging political reports.