அதிமுக எம்எல்ஏக்கள் ரோட்டில் நிற்கிறார்கள் தெரியுமா? தவெகவை வெளுத்த டிடிவி தினகரன்!

  • புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்தது முதல் மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சனைகள் உச்சத்தில் இருக்கின்றன. இன்னொரு பக்கம் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்களை தங்கள் பக்கம் இழுக்கும் பணிகளில் தீவிரமாக களமிறங்கி இருக்கிறார்கள்.

    Advertisement

    அமமுகவில் இருந்து ஏராளமானோர் விலகி தவெக பக்கம் நகர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசுகையில், சினிமாவில் உச்ச நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த விஜய்யால் மற்ற கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அன்றைக்கே கூறினேன்.

    Advertisement

    இன்று திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்று என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்கள் ஒரு பேராபத்திற்கு வழிவகுத்து கொடுத்துள்ளார்கள். இதனை மக்கள் விரைவில் உணர்வார்கள். நடந்த முடிந்த சட்டசபைத் தேர்தலில் 108 தொகுதிகளில் தவெக வென்றுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் 126 தொகுதிகளில் வென்று சுமார் 3 கோடி வாக்குகளை பெற்றுள்ளன. இதனை தவெகவினர் உணர்ந்து செயல்பட வேண்டும்.

    புதிய ஆட்சி என்பதால் நிர்வாகப் பயிற்சி பெற 6 மாத அவகாசம் கொடுப்பதில் தவறு இல்லை. யாரும் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றுங்கள் என்று கேட்கவில்லை. ஆனால் ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்திலேயே இவரே தான் முதல் கையெழுத்தாக 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று கூறிவிட்டு, தற்போது இரு மாதங்களுக்கு ஒருமுறை தான் கணக்கீடு என்கிறார்.

    Advertisement

    இது மக்களை ஏமாற்றும் செயல் இல்லையா? 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை 100% தள்ளுபடி செய்வேன் என்றார். நான் பொய் சொல்ல மாட்டேன் என்று கூறிவிட்டு, தற்போது ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே கடன் தள்ளுபடி என்று அறிவித்திருப்பது ஏமாற்று வேலை. இதனை கண்டித்து டெல்டா மாவட்ட விவசாயிகள் தீவிரமாக போராடி வருகிறார்கள்.

    திருச்சியில் விஜய் உடல்மொழியும், அவர் பேசிய விதமும் எப்படி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். திமுக கூட்டணியை தீய சக்தி என்று விமர்சித்துவிட்டு, அதே திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தான் ஆட்சி அமைத்துள்ளார். கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் திருமாவளவன் ஆகியோர் இந்த ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தது தவறு என்பதை உணவரும் காலம் விரைவில் வரும்.

    Advertisement

    அதிமுகவைச் சேர்ந்த 25 எம்எல்ஏ-க்களை ஆசை காட்டி சின்னப் பிள்ளைகளுக்கு பிஸ்கட் கொடுத்து கடத்துவது போல் தூக்கி வந்து ஆதரவு பெற்று ஆட்சி நடத்துகிறார்கள். இப்போது அவர்கள் ரோட்டில் நிற்கிறார்கள். இவர்களின் இந்த அயோக்கியத்தனத்திற்கு பின்னால் இருக்கும் தூய சக்தி யார் என்பது மக்களுக்கு தெரியும். தேர்தல் நேரத்தில் பேசுவதை போல் இன்னும் கத்தி டயலாக் பேசி கொண்டிருக்காமல், ஒழுங்காக ஆட்சியை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    TTV Dhinakaran: TTV Dhinakaran Lashes Out at TVK, Accuses Vijay's Party of Blundering, Citing the Plight of AIADMK MLAs