ஸ்டாலினுக்கு அமெரிக்காவில் பாராட்டு விழா.. திமுக தலைவரானதற்கு வாழ்த்து!


சென்னை: திமுகவின் தலைவராக ஸ்டாலின் தேர்வானதை கொண்டாடும் வகையில் அமெரிக்காவில் இரண்டு நாள் முன்பு பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது.

திமுகவில் தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். கடந்த மாதம் நடந்த பொதுக்குழுவில் இதற்கான தேர்தல் நடந்தது. இதில் ஸ்டாலின் போட்டியின்று தேர்வானார்.

இந்த நிலையில் இந்த தேர்வை இப்போதும் திமுகவினர் பல இடங்களில் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில், திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வானதற்கு அமெரிக்காவில் கொண்டாட்ட விழா நடத்தப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள பசுபிக் கிரீன் பண்டிங் என்ற இடத்தில் இந்த விழா நடந்தது. ஸ்டாலினுக்காக கேக் வெட்டி விழா கொண்டாடப்பட்டது.

இது கழக தலைமை பேச்சாளர் ஒப்பிலாமணி கலந்து கொண்டு பேசினார். அதேபோல் பொருளாளர் துறைமுருகனுக்கும் இதில் பாராட்டி விழா நடத்தப்பட்டது. அமெரிக்க வாழ் திமுக உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Have a great day!
Read more...

English Summary

USA DMK cadres celebrated M.K.Stalin new posting as DMK chief.