பாக்யராஜ் எடுக்க நினைத்த முந்தானை முடிச்சு பார்ட் 2.. பழம்பெரும் நடிகை சச்சு உருக்கமான பேட்டி

  • சென்னை: இயக்குனர் பாக்யராஜ் குறித்து பழம்பெரும் நடிகை சச்சு பிரபல தமிழ் செய்தி ஊடகத்திற்கு உருக்கமான பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, எனக்கு பாக்யராஜ் இறப்பு செய்தி மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. நடுவில் சில விழாக்களில் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமாவை பார்த்தேன்.. அதன்பிறகு சில திருமணங்களில் பார்த்தேன்.. நான் அவருடன் அதிகமாக நடித்தது இல்லை.. சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படத்தில் நிறைய நடிகர்கள் நடித்தோம்.. நாங்கள் எல்லாருமே ஒன்றாக இருந்தோம்.. மிகவும் ஜாலியாக பேசுவார் பாக்யராஜ்.

    Advertisement

    நான் பூர்ணிமா உடன் படங்கள் பண்ணியிருக்கிறேன்.. ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்பு முந்தானை முடிச்சை ரீமேக் செய்து, அதில் வரும் குழந்தை வளர்ந்து, அந்த குழந்தையில் இருந்து கதை என்று கூறி ஒரு புது இயக்குனர் வந்தார். பாக்யராஜூம் வந்திருந்தார். ஊர்வசியும் வந்திருந்தார். அந்த செட்டப் அப்படியே வந்தாங்க.. அதில் நான் நடித்தேன். பாட்டி மாதிரி ஆக்டிங் பண்ணினேன். அது நின்று போனது.. அண்மை காலத்தில் பார்க்கும் போது பல ரீமேக் படங்கள் வந்தது. எனவே முந்தானை முடிச்சை ஏன் ரீமேக் பண்ணக்கூடாது என்று நான் பாக்யராஜிடம் கேள்வி எழுப்பினேன். நீங்கள் மனசு வைத்தால் சாத்தியம் என்று பாக்யராஜிடம் நான் கேட்டேன்.

    Advertisement

    நீங்கள் திரைக்கதையை மிகவும் நன்றாக கூறுவீர்கள். நீங்கள் கதை சொல்லும் விதம் மிக அழகாக இருக்கும்.. ஏன் நீங்கள் பண்ணக்கூடாது என்று கேட்டேன்.. பூர்ணிமா உடன் வந்த அவர், ஆமாம் அம்மா.. ஆனால் அது கொஞ்சம் கஷ்டம் அம்மா என்று லேசாக சிரித்தார்.. பாக்யராஜ் திரைக்கதையை அருமையாக சொல்வதில் வல்லவர். அவரது கைதியின் டைரி திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும்.. முந்தானை முடிச்சு படத்தில் சின்ன சின்ன பசங்களை வைத்து ஜாலியான பொழுதுபோக்குபடமாக, மிகவும் இயல்பானதாக இருந்தது..

    சினிமாவிற்கு போதா நேரமோ என்னவோ தெரியவில்லை.. அண்மையில் பாரதிராஜா உடல் நிலை சரியில்லாமல் காலமானார். அவரை தொடர்ந்து பாக்யராஜூம் இறந்து போனது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அனுபவம் உள்ளவர்கள் நம்முடன் இருக்க வேண்டும்.. ஆனால் இயற்கையை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது..

    Advertisement

    ரசிகர்களுக்கும், அவருடன் பணியாற்றியவர்களுக்கும், முக்கியமான பூர்ணிமா, மகள், மற்றும் மகன் மற்றும் அவரது குடும்பத்தினர் எல்லாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கலங்கி அழுதபடியே கூறினார்..

    English Summary

    Veteran actress Sachu on the sequel to Mundhanai Mudichu planned by Bhagyaraj