விஜய் ஆட்சி 6 மாதத்தில் கவிழும்.. 25 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உறுதி! அடித்து சொல்லும் அதிமுக எம்பி

  • சென்னை: விஜய் ஆட்சி 6 மாதத்தில் கவிழும் என்று அதிமுக எம்பி தனபால் தெரிவித்துள்ளார். மேலும், 3 ல் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாததால், விஜய்க்கு ஆதரவு அளித்த 25 எம்.எல்.ஏக்களும் விரைவில் தகுதி நீக்கம் செய்யப்படுவது உறுதி என அவர் தெரிவித்துள்ளார். அதிமுகவில் பிளவு ஏற்பட்ட சூழலில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கூட்டினார். இந்த கூட்டத்தில் 80 பேர் பங்கேற்றதாகவும் தனபால் கூறியுள்ளார்.

    Advertisement

    தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு அதிமுகவில் எஸ்பி வேலுமணி தலைமையிலான 25 எம்.எல்.ஏக்களும் ஆதரவு அளித்தனர்.

    Advertisement

    அதிமுகவில் பிளவு

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 எம்.எல்.ஏக்கள் எதிர்த்து வாக்களித்த நிலையில், எஸ்பி வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் ஆதரவாக வாக்களித்து இருப்பது அதிமுகவிற்குள் பிளவை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பும் கொறடாவை நியமனம் செய்து உள்ளது. தங்கள் தரப்பையே அதிமுக கொறடாவாக அங்கீகரிக்க வேண்டும் என்று இரு தரப்பும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து சபாநாயகர் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை.

    தவெக ஆதரவு அளித்த விவகாரத்தில் அதிமுகவில் உட்கட்சி பூசல் மீண்டும் வெடித்துள்ள நிலையில், பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று சிவி சண்முகம் தரப்பு வலியுறுத்தி வருகிறது. ஆனால், எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தரப்பு ஆதரவாளர்கள் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார். இத்தகைய பரபரப்புக்கு இடையே இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கூட்டினார்.

    Advertisement

    விஜய் ஆட்சி கவிழும்

    இந்தக் கூட்டத்தில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் 80 பேர் பங்கேற்றதாக அக்கட்சியினர் கூறினர். கூட்டத்திற்கு பிறகாக செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்பி தனபால், விஜய் ஆட்சி விரைவில் கவிழும் என்றார். இது குறித்து தன்பால் எம்பி கூறியதாவது:-

    3 ல் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாததால், விஜய்க்கு ஆதரவு அளித்த 25 எம்.எல்.ஏக்களும் விரைவில் தகுதி நீக்கம் செய்யப்படுவது உறுதி. இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 80 பேர் பங்கேற்றனர்.. தவெகவின் செயல்பாடுகளால் ஆதரவு அளித்த கட்சிகளும் அதிருப்தியில் உள்ளனர். எனவே அடுத்த 6 மாதங்களில் விஜய்யின் ஆட்சி கவிழும்" என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    AIADMK MP Dhanapal has claimed that the Vijay-led government in Tamil Nadu will collapse within six months. He also alleged that 25 MLAs who extended support to Vijay could soon face disqualification due to the lack of the required two-thirds majority. His remarks came after the AIADMK district secretaries’ meeting chaired by Edappadi K. Palaniswami in Chennai.