CM Vijay Salary: கோடிகள உதறிட்டு.. 10 டூ 4 வேலை! அரசு ஊழியராய் விஜய்யின் சம்பளம் இவ்வளவு தானா? என்னங்க சொல்றீங்க!

  • சென்னை: தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கிய நடிகர் ஜோசப் விஜய், தற்போது தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகிறார். சினிமாவில் இருந்தபோது ஒரு படத்துக்கு கோடிக்கணக்கில் ( ஜனநாயகன் ரூ.250 கோடி) சம்பளம் வாங்கிய விஜய், இப்போது முதல்வராக பெறும் மாத சம்பளம் எவ்வளவு என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த கட்டுரையில் விஜய்யின் ஊதியம், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்..

    Advertisement

    2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது விஜய் அடிக்கடி பேசிய ஒரு வசனம் மக்களிடம் பெரிய கவனத்தை பெற்றது. "கோடிகளில் கிடைத்த சம்பளத்தை விட்டுவிட்டு மக்களுக்காக அரசியலுக்கு வந்திருக்கிறேன்" என்று அவர் பல மேடைகளில் கூறியிருந்தார்.

    Advertisement

    சொன்னபடியே விஜய் முதல்வராகிவிட்டார். இந்நிலையில், முதல்வராக அவருக்கு அரசாங்கம் வழங்கும் சம்பளம் மற்றும் சலுகைகள் பற்றிய விவரங்களை தற்போது பார்க்கலாம்..

    தமிழக வெற்றிக் கழகம்

    தமிழ்நாட்டில் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், முதல்வர் உள்ளிட்டோரின் சம்பளம் மற்றும் சலுகைகள் சட்டப்பேரவை விதிகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன. காலத்திற்கு ஏற்ப இந்த தொகைகள் உயர்த்தப்பட்டும் வந்துள்ளன. ஒருகாலத்தில் எம்.எல்.ஏக்களின் மாத ஊதியம் மிகவும் குறைவாக இருந்தது. அதாவது 25,000 ஆக இருந்தது. பின்னர் பல கட்டங்களாக உயர்த்தப்பட்டு வந்தது. 008-ல் ரூ. 30,000 ஆகவும், 2009-ல் ரூ. 50,000 ஆகவும், 2011-ல் ரூ. 55,000ஆகவும் உயர்த்தப்பட்டது.

    Advertisement

    விஜய் சம்பளம்

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, எம்.எல்.ஏக்களின் சம்பளம் ஒரு லட்ச ரூபாயை தாண்டும் அளவுக்கு உயர்த்தப்பட்டது. அதாவது 1,05,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதைய விதிகளின்படி, முதல்வரின் அடிப்படை சம்பளம் தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் பல்வேறு படித்தொகைகள் மற்றும் சலுகைகளும் சேர்க்கப்படுகின்றன. அதன்படி, தமிழ்நாடு முதல்வராக உள்ள விஜய்க்கு மாதத்திற்கு சுமார் 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.

    அடிப்படை ஊதியம்

    இந்த தொகையில் அடிப்படை ஊதியம் மட்டுமல்லாமல், தொகுதி படி, வாகன படி, தொலைபேசி செலவு, தபால் செலவு உள்ளிட்ட பல்வேறு படித்தொகைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. மாதப்படி 10,000, தொகுதிப்படி 25,000, தபால்படி ரூ. 2,500, தொலைப்பேசி படி ரூ. 7,500, வாகனப்படி ரூ. 25,000 என வழங்கப்படும். இதுதவிர, முதல்வருக்கு அரசாங்கம் சார்பில் பல சலுகைகளும் வழங்கப்படுகின்றன. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிகாரப்பூர்வ இல்லம், அரசு வாகனங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், அலுவலக வசதிகள் ஆகியவை முதல்வருக்காக ஒதுக்கப்படும்.

    Advertisement

    'இசட் பிளஸ்' பாதுகாப்பு

    மேலும், முதல்வரின் அலுவலகம் மற்றும் இல்லத்தில் பணிபுரியும் உதவியாளர்களின் சம்பளத்தையும் அரசே ஏற்கும். அரசு பணிகள் மற்றும் அவசர தேவைகளுக்காக விமானம் அல்லது ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டால் அதன் செலவுகளும் அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும். பாதுகாப்பு வசதிகளும் மிக உயர்ந்த அளவில் வழங்கப்படுகின்றன. மத்திய அரசு சார்பில் 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்கப்படுவதால், கமாண்டோ பாதுகாப்பு உட்பட 24 மணி நேர பாதுகாப்பு முதல்வருக்கு இருக்கும்.

    ஜனநாயகன்

    சினிமாவில் இருந்தபோது விஜய் ஒரு படத்துக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. குறிப்பாக அவரது கடைசி திரைப்படமான ஜனநாயகனுக்கு 250 கோடி வரை ஊதிய வழங்கப்பட்டதாக திரையுலக வட்டாரங்களில் கூறப்பட்டது. அந்த நிலைமையிலிருந்து தற்போது மாதம் சில லட்ச ரூபாய் சம்பளத்துடன் வேலை செய்யப் போகிறார். கோடிகளில் சம்பளம் வாங்கிய நடிகராக இருந்து, லட்சங்களில் சம்பளம் பெறும் முதல்வராக மாறியிருக்கும் விஜயின் அரசியல் பயணம்.

    English Summary

    From ₹250 crore movie paychecks to CM salary, Vijay’s earnings as Tamil Nadu Chief Minister spark discussion.