அபிராமிக்கு என்ன கிடைக்கும்.. தூக்கா.. ஆயுளா...??


சென்னை: அபரிமிதமான காமம் எவ்வளவு ஆபத்தானது, அபாயகரமானது என்பதற்கு உதாரணம்தான் அபிராமி!!

பாழாய்ப் போன இந்த கள்ளக்காதல் நம் நாட்டிற்கு புதிதில்லைதான்.. ஆனால் அதன் எல்லைகளும் வரைமுறைகளும் மிகவும் பயங்கரமாகும்போதுதான், அதன் செயல்வடிவங்கள் வேறுபடும்போதுதான் அவை வெளிச்சத்துக்கு வந்து கேவலப்பட்டு போகின்றன.

2 பிஞ்சுகள்

அபிராமிக்கு காமம் தலைக்கேறியதால் பெத்த குழந்தைகள் இரண்டும் கண்ணுக்கு தெரியாமல் போனது. நம்மை சுற்றி என்ன நடக்கிறது, நம் குடும்பம், 2 குழந்தைகள், அக்கம்பக்கம், உறவினர்கள், இதில் ஏதாவது ஒன்றை யோசித்திருந்தால்கூட இரண்டு பிஞ்சுகள் தப்பி இருக்கும்.

நிஜ உலகம்

இதுவரை அபிராமி குறித்து வெளிவந்திருக்கும் வீடியோக்கள், டப்ஸ்மேஷ்கள் போன்றவற்றை பார்த்தால், அவருக்கு புற உலகிலே அதாவது வெறும் பகட்டிலேதான் நாட்டம் அதிகம் இருந்திருப்பதாக தெரிகிறது. நிஜமான உலகம் தன் ரத்தமும் சதையுமான குழந்தைகள் என்று கடைசிவரை அவருக்கு தெரியாமலேயே போய்விட்டது.

ஆயுள் நிச்சயம்

இப்போது ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டு, களி திண்ணும் நிலைமைக்கு யார் காரணம்? அபிராமி மட்டும்தான் காரணம். 2 குழந்தைகளை கொன்ற குற்றத்திற்காக அதிகபட்சமாக இந்திய அரசியல் சாசன சட்டத்தின்படி மரண தண்டனைதான். ஆனால் நம் நாட்டில் மரண தண்டனையை நிறைவேற்ற அப்போதிருந்தே எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. மற்ற நாடுகளைவிட நம் நாட்டில் மரண தண்டனை குறைவுதான். ஆனால் கண்டிப்பாக ஆயுள் தண்டனைக்கு நிறையவே வாய்ப்புள்ளது.

அபிராமி ஒரு பாடம்

கடந்தசில தினங்களாக சிறை கைதிகளிடம் அபிராமி புலம்புவதாக தகவல்கள் கசிந்தன. தான் தவறு செய்துவிட்டதாகவும், குழந்தைகளை கொன்றதற்காக பார்க்கும் யாவரிடமும் புலம்புவதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் என்ன பிரயோஜனம்? சிறைக்குள்ளேயே கதறி கதறி அழுது புரண்டு உருண்டால்கூட அந்த குழந்தைகள் திரும்ப கிடைக்கப் போவதில்லை. ஆனால் தற்போதுகூட, தாங்கள் சுமந்து பெற்றெடுத்த குழந்தைகளை மறந்து கள்ளக்காதலில் ஈடுபட்டு கொண்டிருப்போர், அபிராமியின் இந்த நிலையை நிச்சயம் பாடமாக எடுத்து கொள்ள வேண்டும்!

Have a great day!
Read more...

English Summary

What punishment will the court give to Abirami?