தஞ்சாவூர்: தஞ்சாவூரில் டியூஷன் டீச்சர் திவ்யாவும், 16 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வுபெற்ற ஆசிரியர் சண்முகசுந்தரராஜ் இருவரும் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை நிர்மலாதேவி பாணியில், கல்வி நிலையங்களில் நடந்து வரும் இதுபோன்ற அநாகரீகங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதும் அவசியமாகி உள்ளது...!!!
அருப்புக்கோட்டை நிர்மலா தேவி என்றாலே தமிழகம் முழுவதுமே பரிச்சயமான பெயர்.. பேராசிரியையாக பணியாற்றியவர்.. உயர்கல்வி அதிகாரிகளின் பெயரை சொல்லி, தன்னிடம் படித்த மாணவிகளைத் தவறான செயல்களுக்கு வற்புறுத்தியதுடன் அதற்கான பேரபேச்சுகளிலும் ஈடுபட்டவர்..
இது தொடர்பாக நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் வழக்கும் நடைபெற்றது.. அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையை அனுபவித்து வருகிறார். இதேபோன்ற ஒரு சம்பவம் தஞ்சையிலும் இப்போது நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. தஞ்சாவூர் புது பஸ் ஸ்டாண்டு அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அறிவியல் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் திவ்யா.. 38 வயதாகிறது.. இவரது வீடும் இதே பகுதியில் உள்ளது.. தன்னுடைய வீட்டிலும், மாணவிகளுக்கு டியூஷன் எடுத்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியரான சண்முகசுந்தரராஜ் (61) என்பவருடன் திவ்யாவுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது.. இதனால் டியூஷன் நடக்கும் நேரங்களில், சண்முகசுந்தரராஜ் அடிக்கடி ஆசிரியை திவ்யாவின் வீட்டிற்கு வந்து செல்வாராம். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம், டியூஷனுக்கு வந்த 16 வயது சிறுமி ஒருவரின் செல்போன் நம்பரை சண்முகசுந்தரராஜ் திவ்யாவிடமிருந்து வாங்கியிருக்கிறார்.. அந்த சிறுமிக்கு போனை போட்டு, அசிங்கம் அசிங்கமாக சண்முகசுந்தரராஜ், பேசியிருக்கிறார்.. நாளுக்கு நாள் சண்முக சுந்தர்ராஜ் தொல்லை அதிகமானதால், இது குறித்து தனது பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் முறையிட்டார். மாணவியின் புகாரைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம், உடனடியாக தஞ்சாவூர் மகளிர் போலீசுக்கு புகார் அளித்தது. இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டது. அப்போதுதான், ஆசிரியை திவ்யாவின் துணையோடுதான் சண்முகசுந்தரராஜ் அந்த சிறுமிக்கு பாலியல் டார்ச்சர் தந்தார் என்பது விசாரணையில் உறுதியானது.. இதையடுத்து ஆசிரியை திவ்யா, சண்முகசுந்தரராஜ் இருவரையும் போக்சோவில் கைது செய்துள்ளனர். ஆசிரியர் திவ்யா இப்போது ஜெயிலில் உள்ளார்.. இதற்கு முன்பு வேறு மாணவிகளிடம் இப்படி நடந்துகொண்டாரா என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது.. பாதிக்கப்பட்ட 16 வயது மாணவியின் குடும்பத்தில் பொருளாதார வசதி கிடையாது.. தன்னுடைய அம்மாவின் அரவணைப்பில் சிறுமி வாழ்ந்து வருகிறார்.. இந்த வறுமையைத்தான் திவ்யா, தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளார். "எனக்கு தெரிந்த ஒருத்தரை உனக்கு அறிமுகப்படுத்துறேன். அவர் கிட்ட கொஞ்சம் அட்ஜஸ்ட் செஞ்சுக்கிட்டா, உன் படிப்பை அவரே பார்த்துக்குவார்... உன் விருப்பப்படி வாழலாம்" என்று பேசி பேசியே, அந்த மாணவியை இப்படியான அசிங்கத்தில் தள்ளியிருக்கிறார். "காரில் சார் கூட போயிட்டு வா" என்று மாணவியை கட்டாயப்படுத்தி அனுப்பி வைப்பாராம் திவ்யா.. அப்போது ஓடும் காரிலேயே சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார் சண்முகசுந்தர்ராஜ்.. சிலசமயம் சண்முகசுந்தர்ராஜூக்கு வீடியோ கால் செய்து, மாணவியை பேச வைப்பாராம் திவ்யா.. டீச்சரே இப்படி செய்வதால், இதை எப்படி வெளியில் சொல்வது என்று மாணவி பயந்துள்ளார்.. வீட்டில் சொன்னால் படிப்பை நிறுத்திவிடுவார்களோ என்றும் 10 மாதமாகவே மன உளைச்சலுடன் கலங்கியுள்ளார். பிறகுதான் பள்ளி தலைமை ஆசிரியரிடம் விஷயத்தை கொண்டு சென்றிருக்கிறார். அருப்புக்கோட்டை நிர்மலாதேவி வழக்கில் தொடங்கியது முதல், தமிழகம் முழுவதும் இது போன்ற கல்வித்துறை சார்ந்த பாலியல் குற்றச் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருவது பெற்றோர்களை நடுங்கச் செய்துள்ளது. மாணவர்களின் பாதுகாப்பிற்கு அரணாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே, தங்களின் சுயலாபத்திற்காக மாணவிகளை பலிகடாவாக்கும் அருப்புக்கோட்டை நிர்மலாதேவி பாணியிலான இத்தகைய கொடூரங்கள், ஒட்டுமொத்த கல்வி சமூகத்திற்கும் கரும்புள்ளியாக மாறியிருக்கிறது.. அத்துடன் சமூகத்தின் அறநெறியையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது....!!!தஞ்சாவூர் திவ்யா
16 வயது மாணவி தந்த புகார்
மாணவியின் வறுமை
ஓடும் காரிலும் தொல்லை
அருப்புக்கோட்டை நிர்மலாதேவி