காவிரி விவகாரம்.. தஞ்சாவூரில் திரண்ட திமுக.. உதயநிதி தலைமையில் போராட்டம்

  • தஞ்சாவூர்: மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடாமல் அணை கட்டுவதில் கறாராக உள்ளது. தண்ணீர் திறந்துவிட கோரி தமிழகத்திலும், தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க கூடாது என்று கர்நாடகாவிலும் போராட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தஞ்சாவூரில் போராட்டம் நடைபெற்றது.

    Advertisement

    காவிரி நீர் விவகாரம் தமிழக, கர்நாடகா மாநிலங்களில் பெரும் பரபரப்பாகியுள்ளது. தண்ணீர் வழங்க வேண்டுமென தமிழகத்திலும், தண்ணீர் திறந்துவிடக்கூடாது என கர்நாடகாவிலும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. முதலமைச்சர் விஜய் கர்நாடகா சென்று, அம்மாநில முதலமைச்சர் டி.கே சிவக்குமார் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போதைய சூழலுக்கு விஜய் கர்நாடகா வரவேண்டாம் என சிவக்குமார் கூறிவிட்டார்

    Advertisement

    திமுக போராட்டம்

    கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டத்தை சிவக்குமார் நடத்தியுள்ளார். அனைத்து கட்சிகளுமே தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீர் கூட திறந்துவிடக்கூடாது என்கிற நிலையில் உறுதியாக உள்ளனர். கர்நாடக அரசுக்கு மத்திய பாஜக அரசு துணையாக இருப்பதாக தமிழக அரசியல் கட்சிகள் புகார் கூறி வருகிறார்கள். இதுகுறித்து தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

    அனைத்து கட்சி கூட்டம் அவசியமில்லை என்று தவெக அரசு கூறியுள்ளது. கர்நாடக அரசை கண்டித்து தமிழகத்திலும் போராட்டம் நடைபெறுகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி சிபிஐ, தேமுதிக கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த விவகாரத்தில் பிரதான எதிர்க்கட்சியான திமுக தஞ்சாவூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவரும், அக்கட்சி இளைஞரணி செயலாளருமான உதயநிதி தலைமையில் தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு போராட்டம் நடைபெற்றது.

    Advertisement

    தவெகவை கண்டித்து

    தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடாமல் மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசு, அதற்கு துணை போகும் மத்திய அரசு, இந்த விவகாரத்தை மெத்தன போக்குடன் கையாளும் தவெக அரசு ஆகியோரை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தவெக தேர்தலில் வாக்குறுதியில் அளித்தபடி, விவசாயிகளின் பயிர் கடன் ரத்து உள்ளிட்டவற்றை நிறைவேற்றவும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    English Summary

    Cauvery issue Karanataka government trying to construct Mekedatu dam. DMK To conduct protest in Tanjore today under Udhayanidhi Stalin.