தஞ்சாவூர்: சாலை மறியல் தவறு. அந்தப் பையனை போலீஸ் அடித்தது அல்லது அடிப்பேன் என்று சொன்னது தவறு. அந்தப் பையன் போலீஸை அடித்தது பெரிய தவறு. இதெல்லாம் விட மிகப்பெரிய தவறு , அவன் கழுத்தில் இப்படி கையை வைத்து மடக்கியது. Choke_Hold என்று இதற்குப் பெயர். நண்பர்களிடையே விளையாட்டாகக் கூட இப்படி பின்பக்கமாக வந்து சிலர் செய்வதுண்டு. சிறிய அளவில் அழுத்தம் மாறினாலோ, அல்லது அப்படி கழுத்து அழுத்தப்படும் நபருக்கு ஏதேனும் உடல் பிரச்னை இருந்தாலோ, அல்லது இப்படி அழுத்தப்படும் நபர், அடங்காமல் திமிறி அதனால் அழுத்தம் கூடினாலோ, சுலபமாக மரணம் நிகழும்.
அந்தப் பையன் திமிறியதற்காக அவனை அடக்க இதைத் தெரியாமலோ, சாதாரணமாகவோ அந்தக் காவலர் செய்திருக்கலாம். ஆனால், யோசித்துப் பாருங்கள், அந்தக் களேபரத்தில் இந்தக் குறிப்பிட்ட செக் கோல்ட் மூலம், அந்தப் பையன் உயிருக்கு ஏதேனும் ஆகி இருந்தால், ஒரு ரிபில் எபெக்ட் ண் கடைசிக் கொடுமையாக மொத்தப் பழியும் அந்தக் காவலர் மீதும், காவல் துறையின் மீதும் விழுந்திருக்கும்.
ஒரு குற்றவாளியை அடக்கப் பல உயிருக்கு ஆபத்தில்லாத வழிமுறைகள் இருக்கும்போது இந்த வகையில் செய்யக் கூடாது என்பதை இனியாவது பயிற்சி கொடுத்து தெளிவுபடுத்துவார்கள் என்று நம்புகிறேன். பல நாடுகளில் காவல் துறைக்கு choke hold பயன்படுத்தக் கூடாது என்று விதிமுறைகளே உண்டு. உங்கள் நண்பர்களோ, பிள்ளைகளோ விளையாட்டாக இதைச் செய்தால் உடனே கண்டித்து இதன் அபாயத்தைச் சொல்லுங்கள். மிகப்பெரிய ஒரு எதிர்மறை சூழ்நிலையில் யார் செய்த புண்ணியமோ ஒரு பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்று சங்கர் ஜி என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவினை புளூ சட்டை மாறன் ஷேர் செய்துள்ளார். தஞ்சை ரயில் நிலையம் முன்பு வி.சி.க. சார்பில் அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாள் மற்றும் மாநாடு தொடர்பான விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்தது. அனுமதியின்றி அந்த விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்ததாக அந்த பேனரை நேற்று மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இதனை கண்டித்து தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு வி.சி.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் பேனரை மீண்டும் வைத்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என வாக்குவாதம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த ஏராளமான பொதுமக்கள் வழிவிடுமாறு கூறி வி.சி.க.வினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதேபோல அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவரும் வழிவிடுமாறு கூறினார். அப்போது வி.சி.க.வினர் அந்த இளைஞரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அந்த இளைஞரை சமாதானப்படுத்த முயன்றார். தன்னை சமாதானப்படுத்திய போலீசாரிடம், அந்த வாலிபர், தான் வேலைக்கு செல்ல வேண்டும். நான் வேலைக்கு செல்லாவிட்டால் என்னுடைய சம்பளத்தை யார் தருவார்கள்? எனக்கேட்டு வாக்குவாதம் செய்தார். அப்போது போலீசார், வாலிபரிடம் அமைதியாக இருக்கும்படி கூறினார். ஒரு கட்டத்தில் போலீசாருக்கும், அந்த இளைஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த இளைஞர சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹீம், தாக்கினார். உடனே ஆவேசமான அந்த இளைஞர் அப்துல் ரஹீமின் கன்னத்தில் அறைந்தார். அவரது தொப்பி பறந்து தரையில் விழுந்தது. இதனால் அடுத்த நொடி அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அந்த இளைஞரை Choke_Hold பிடி போட்டு ஜீப்பில் குண்டுகட்டாக தூக்கி சென்றனர். போலீசாரின் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் தஞ்சை அருகே உள்ள விளார் கிராமத்தை சேர்ந்த ஆகாஷ்(வயது 26) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கொலை மிரட்டல் உள்பட 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
என்ன நடந்தது