அமைச்சர் கீர்த்தனாவின் செருப்படி பதில்..ஆதரவாக வந்த கஸ்தூரி! பரந்தூர் விவகாரத்தில் விஜய்க்கு அட்வைஸ்

  • தஞ்சாவூர்: தமிழகத்தில் பெண்கள் குறித்து தவறாக பேசுவது தொடர் கதையாக உள்ளது. தற்போது அமைச்சர் கீர்த்தனா குறித்து ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. இதற்கு அமைச்சர் கீர்த்தனா செருப்படி பதில் கொடுத்து இருக்கிறார் அதனை நான் பாராட்டுகின்றேன். பெண்கள் உடை அணிவது தனிப்பட்ட உரிமை என நடிகை கஸ்தூரி ஆதரவு கொடுத்துள்ளார். அதே நேரத்தில் பரந்தூர் விமான நிலையம் ரத்து என்ற அறிவித்திருப்பது தமிழ்நாட்டின் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.

    Advertisement

    கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," தவெகவின் வாக்குறுதிகளை பொறுமையாக நடைமுறைப்படுத்தட்டும் என்று மக்கள் அமைதியாக இருக்கிறார்கள். ஆனால் அதற்காக பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளையும் போதை கலாச்சாரத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாது.

    Advertisement

    இதற்காகத்தான் ஆட்சி மாற்றத்தை மக்கள் கொண்டு வந்தார்கள். பரந்தூர் விமான நிலையம் ரத்து என்ற அறிவித்திருப்பது தமிழ்நாட்டின் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். இதனால் பெரும் பொருளாதார பின்னடைவு ஏற்படும்.

    நடிகை கஸ்தூரி

    திமுக ஆட்சியில் கொண்டு வந்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இதனை ரத்து செய்யக்கூடாது. இந்த பரந்தூர் விமான நிலைய திட்டம் மத்திய மாநில அரசுகளின் கூட்டு திட்டம். இது 90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் இந்த அறிவிப்பை விஜய் மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேகதாது பிரச்சனைக்கு உங்களுடைய கூட்டணி மந்திரி சபையில் உள்ள இரண்டு அமைச்சர்களுடைய வாலை பிடித்து முருக்கினாலே சாரி அப்படி சொன்னால் தவறாகிவிடும்.

    Advertisement

    மேகதாது அணை

    அமைச்சர்கள் மூலமாக பேசினாலே டிகே சிவகுமாரை பணிய வைக்க முடியும். உங்களுக்கும் காங்கிரஸ்க்கும் ரிலேஷன்ஷிப் லப்சர் ஆவதற்கும் முன்பே மேகதாது பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும். சட்டசபையில் கொடுத்ததெல்லாம் கொடுத்தார் ஊருக்காக கொடுத்தார் என்று ஒரு சட்டமன்ற உறுப்பினர் முதல்வரை புகழ்ந்து பாடி இருக்கிறார். பாட்டு பாடட்டும் ஜாலியாக இருக்கட்டும். ஆனால் நீங்கள் ஊருக்கு கொடுக்கவில்லை. ஊர் தான் உங்களுக்கு கொடுத்திருக்கிறது. ஊர் மக்கள்தான் உங்களை ஆட்சியில் அமர வைத்திருக்கிறார்கள்.

    மகாமக திருவிழா

    அதனை மனதில் வைத்துக் கொண்டு நீங்கள் செயல்பட வேண்டும். கும்பகோணத்தில் 2028ல் நடக்கக்கூடிய உலக புகழ்பெற்ற மகாமக திருவிழாவிற்கான எந்த அடிப்படை பணியும் இதுவரை செய்யவில்லை. அதன் தேதியை குறிப்பிடுவதில் கூட முரண்பாடு உள்ளது. மத்திய அரசின் நிதியை தமிழக அரசு இன்னும் ஒரு ரூபாய் கூட பெறவில்லை. லட்சக்கணக்கான மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வர உள்ள இந்த விழாவிற்கான முன்னே ஏற்பாடு ஒன்று கூட நடைபெறவில்லை.

    Advertisement

    மோடி - அமித் ஷா

    இந்த மகாமக பெருவிழாவில் மோடி - அமித் ஷா போன்றவர்கள் கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர் இதற்குரிய பணிகளை இன்றிலிருந்து தொடங்க வேண்டும் என்பதே எங்களுக்கு கோரிக்கை. கோடீஸ்வரனாக இருக்கக்கூடிய எம்எல்ஏக்களுக்கு கார் கொடுத்தே தீருவேன் என்று அடம் பிடிப்பதை விட்டு அதற்கு அப்புறம் கோரிக்கை வைக்கப்படுவது போல் உள்ளது. கார் வழங்கும் திட்டமானாலும் தங்க மோதிர வழங்கும் திட்டமானாலும் முன்கூட்டியே முடிவு செய்து கொண்டு, நீங்கள் கேட்பது போல் கேளுங்கள் நாங்கள் கொடுப்பது போல் கொடுக்கிறோம் என்று செயல்படுவது போல் உள்ளது.

    Advertisement

    காங்கிரஸ் - தவெக

    இடைத் தேர்தலுக்குள்ளேயே காங்கிரஸுக்கு இவர்களுக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்படும் என்ற சந்தேகம் வருகிறது. பொதுக் கூட்டத்தில் இன்றய சிஎம் நாளைய பிஎம் என்று தவெகவினர் புகழ்ந்து பேசி இருப்பதும். இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பை பதிவு செய்து இருக்கிறார்கள். இடைத்தேர்தலில் தவெக மெஜாரிட்டியை பெற்று விட்டார்கள் என்றால், காங்கிரஸ் அமைச்சர்களின் இடம் ஆட்டம் காணும் என்ற சந்தேகம் எனக்கு உள்ளது" என்று கூறினார்.

    English Summary

    Actress Kasthuri supports Keerthana over the viral video controversy and urges Vijay to reconsider cancelling the Parandur airport project.