தஞ்சாவூர் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் மானியம், இயந்திரம் வாங்க அரசின் 70% சலுகை! அப்ளை செய்ய ரெடி?

  • தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் திட்டத்தில் முக்கியமான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வாங்குவதற்கு தகுதியான விவசாயிகளுக்கு 40 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை மானியம் கிடைக்கிறது. இந்த மானியத்தை பெற உழவர் செயலி மூலம் எப்போது விண்ணப்பிக்க வேண்டும் தெரியுமா? அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

    Advertisement

    தமிழ்நாட்டில் விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பது நாளுக்கு நாள் சிரமமாகி வருகிறது. குறிப்பிட்ட நேரத்தில் வேலைகளை முடிக்க ஆட்கள் இல்லாததுடன், கிடைக்கும் ஆட்களுக்கும் அதிக கூலி கொடுக்க வேண்டிய நிலைமை இருக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு எதிர்பார்க்காத அளவுக்கு செலவும் ஏற்பட்டு விடுகிறது.

    Advertisement

    இந்த சிக்கலைகளையெல்லாம் சமாளிக்கும் வகையில், விவசாய பணிகளை குறைந்த செலவில், உரிய காலத்தில் மேற்கொள்ளும் வகையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியத்தை வேளாண்மைப் பொறியியல் துறை வழங்குகிறது.

    யாருக்கு எவ்வளவு மானியம்?

    இந்தத் திட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறு மற்றும் குறு விவசாயிகள், பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் வரை மானியம் கிடைக்கும்.

    இதில் இன்னொரு கூடுதல் சலுகையும் இருக்கிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதனால் அவர்களுக்கு மொத்தம் 70 சதவீதம் வரை மானியம் கிடைக்கும்.

    Advertisement

    அதேபோல், இதர பிரிவைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு விசைக் களையெடுப்பான், நெல் நடவு இயந்திரம், தட்டை வெட்டும் கருவி ஆகியவற்றை வாங்க கூடுதலாக 10 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்தக் கருவிகளுக்கு 60 சதவீதம் வரை மானியம் பெறலாம்.

    உழவர் செயலியில் விண்ணப்பம்

    சரி.. இந்த மானியத்தைப் பெற எங்கு போய் விண்ணப்பிப்பது என்ற கேள்வி வருகிறதா? தமிழ்நாடு Agri Stack - Farmer Registry-யில் பதிவு செய்த விவசாயிகள், உழவர் செயலி மூலம் தங்களுக்கு தேவையான இயந்திரத்தைத் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.

    Advertisement

    அதற்காக எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள முடியாது.. இதற்கும் குறிப்பிட்ட தேதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் 1 முதல் 7-ம் தேதி வரை பெறப்படும் விண்ணப்பங்கள், 8-ம் தேதி கணினிமயமாக்கப்பட்ட குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும்.

    மற்ற இலக்கிற்காக 15 முதல் 21-ம் தேதி வரை மறுபடியும் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் 22-ம் தேதி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு மெசேஜ் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். முதல் குலுக்கலில் தேர்வு செய்யப்படவில்லை என்றால் கவலைப்பட வேண்டியதில்லை. தேர்வு செய்யப்படாத விண்ணப்பங்கள் அடுத்த குலுக்கலிலும் சேர்த்துக்கொள்ளப்படும்.

    Advertisement

    அதனால் வேளாண் இயந்திரம் அல்லது கருவி வாங்க திட்டமிட்டுள்ள தகுதியான விவசாயிகள், உழவர் செயலி மூலம் விண்ணப்பித்து இந்த மானியத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

    தஞ்சாவூர் ஹேப்பி

    அந்தவகையில், இந்த மானியத் திட்டம் குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ரேவதி தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளார். விவசாயப் பணிகளை எளிதாகவும், குறைந்த செலவிலும் மேற்கொள்ள வேளாண் இயந்திரங்கள் முக்கிய உதவியாக இருக்கும் என்பதால், தகுதியுள்ள விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். உழவர் செயலி மூலம் விண்ணப்பிப்பதால், தங்களுக்கு தேவையான இயந்திரத்தைத் தேர்வு செய்து மானியத்துக்கு விண்ணப்பிக்க முடியும்...!!!

    English Summary

    Tamil Nadu Farmers Get Up to Rs 5 Lakh Subsidy.. 70% Aid for Farm Machinery in Thanjavur, Ready to Apply?