தஞ்சாவூர் டாஸ்மாக் கடைகளில் 10 ரூபாய் எக்ஸ்ட்ரா? கும்பகோணம் வீடியோ வந்ததுமே 6 பேரை தூக்கிட்டாங்க

  • தஞ்சாவூர்: டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிப்பதைத் தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கெனவே 224 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, பல இடங்களில் கடைகள் மூடப்பட்டு போராட்டம் நடந்தது. இப்படிப்பட்ட சூழலில் கும்பகோணம் அருகே மீண்டும் 6 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு என்ன நடந்தது?

    Advertisement

    தமிழகத்தில் டாஸ்மாக் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், இதனை தடுக்க அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மதுபாட்டிலுக்கு கூடுதலாக 1 ரூபாய் வாங்கினால்கூட நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் ஏற்கெனவே எச்சரித்திருந்தார்.

    Advertisement

    அரசு டாஸ்மாக் அதிரடி

    இதன் தொடர்ச்சியாக, கடந்த செப்டம்பர் 2-ம் தேதி ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 67 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். சோஷியல் மீடியா வாட்ஸ்அப் மூலம் வந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மறுநாளும் 157 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    அந்த வகையில் வெறும் 2 நாட்களில் மட்டும் 224 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களுக்கு 3 மாதங்கள் பணி வழங்கப்படாது என்றும் அப்போதே தெரிவிக்கப்பட்டது.

    இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு பகுதிகளில் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளில் 250-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.

    Advertisement

    கும்பகோணம் 10 ரூபாய் வசூல்

    அதுமட்டுமல்லாமல், மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிப்பதைத் தடுக்கும் நடவடிக்கைக்கான செலவையும், காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்துக்கான செலவையும் தாங்களே ஏற்க வேண்டியிருப்பதாக ஊழியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் பல இடங்களில் மதுப்பிரியர்கள் மது கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலைமை உள்ளதாம்.

    இந்நிலையில்தான், கும்பகோணம் அருகே மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலித்ததாக டாஸ்மாக் கடை ஊழியர்கள் 6 பேர் மீண்டும் இப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    திருவிடைமருதூர் அருகே குறிச்சி பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக மது வாங்க சென்ற ஒருவர் லைவ்வாகவே வீடியோ எடுத்துள்ளார். பிறகு அந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்ட நிலையில், அது வேகமாக பரவி வைரலாகிவிட்டது. இதையடுத்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஐஸ்வர்யா இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தினார்.

    Advertisement

    தஞ்சாவூர் வீடியோ

    விசாரணையில், மதுபாட்டிலுக்கு கூடுதல் தொகை வசூலிப்பதற்காக கடை ஊழியர்கள் வெளியாளாக ஒருவரை பயன்படுத்தியதும் தெரியவந்ததாக கூறப்படுகிறது. கும்பகோணத்தை சேர்ந்த 25 வயதான மணிகண்டன் சரத்குமார் என்பவர் இந்த விவகாரத்தில் தொடர்புடையவராக அடையாளம் காணப்பட்டார். இதையடுத்து மாவட்ட மேலாளர் ஐஸ்வர்யா அளித்த புகாரின் பேரில் பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத்குமாரை கைது செய்தனர்.

    மேலும், நிர்வாக நலனுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும், டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதாகக் கூறி குறிச்சி டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர்கள் செந்தில்குமார், சேகர், சரவணன் மற்றும் விற்பனையாளர்கள் துரைபிரகாஷ், மதியழகன், வீராச்சாமி ஆகிய 6 பேரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட மேலாளர் ஐஸ்வர்யா உத்தரவிட்டுள்ளார்.

    Advertisement

    தமிழக அளவில் ஏற்கெனவே 224 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு போராட்டம் வெடித்துள்ள நிலையில், தற்போது மீண்டும் 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...!!

    English Summary

    Kumbakonam TASMAC Extra 10 rupees Collection? 6 Staff Suspended After Thanjavur Video Goes Viral.. What Happened?