தஞ்சாவூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை- ஆசிரியர் & அவருக்கு உதவிய ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது

  • தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் சண்முக சுந்தரராஜ் மற்றும் அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட ஆசிரியை திவ்யா ஆகிய இருவரையும் தஞ்சாவூர் நகர அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

    Advertisement

    தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவிக்கு, அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் செல்போன் வாயிலாக பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    Advertisement

    இதுதொடர்பாக மாணவி புகார் அளித்ததைத் தொடர்ந்து, பள்ளி ஆசிரியர் சண்முக சுந்தரராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உதவியாக இருந்ததாக அதே பள்ளியின் ஆசிரியை திவ்யா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மாணவர்களுக்கு, கல்வியையும், ஒழுக்கத்தையும் போதித்து அவர்களை சிறந்த குடிமக்களாக வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு கொண்ட ஆசிரியர்கள், வேலியே பயிரை மேய்ந்த கதையாக, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Thanjavur Police have arrested Shanmuga Sundararaj, a teacher at a private school in Thanjavur who sexually harassed a female student, and Divya, another teacher who abetted him, under the POCSO Act.