அமைச்சர்கள் ஜோக்கர்களாக இருக்காங்க.. பாஜக என்றாலே விஜய்க்கு பயம்! காவிரி விவகாரத்தில் தவெகவை விளாசிய உதயநிதி

  • தஞ்சை: காவிரி விவகாரத்தில் தமிழக அரசு செயலழிந்து விட்டது. ஒட்டுமொத்த அமைச்சர்களும் ஜோக்கர்களாக உள்ளனர். தமிழகத்தில் பலவீனமான அரசு அமைந்துள்ளதால் தான் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். எதாவது ஒரு பிரச்சனை வந்தால் அதை அப்படியே திசை திருப்பும் செயலில்தான் அரசு ஈடுபடுகிறது எனவும், ரீல்ஸ் வெளியிடுவதில் தான் ஆர்வமாக இருக்கிறார்கள் எனவும் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

    Advertisement

    காவிரியில் நீர் திறக்காதது, மேகதாது அணை கட்ட முயற்சிக்கு கர்நாடக அரசை கண்டித்தும், இதற்கு துணை போகும் மத்திய அரசு கண்டித்தும், இந்த விவகாரத்தை மெத்தன போக்குடன் கையாளும் தவெக அரசை கண்டித்தும் தஞ்சையில் திமுக இளைஞரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆளும் தவெக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் கூறியதாவது:-

    Advertisement

    ஜோக்கர் அமைச்சர்கள்

    லாட்டரி விற அமைச்சர், பிளாக் டிக்கெட் விற்ற அமைச்சர், போதைப்பொருள் அமைச்சர் என எல்லா அமைச்சர்களும் ஜோக்கர்களாக உள்ளனர். அமைச்சர்கள் எல்லாம் படம் பார்த்து கண்ணீர் விடுகிறார்கள். காவிரியில் தண்ணீர் வரவில்லை என்றால் அதற்கு எதுவும் சொல்லாமல் மவுனமாக இருக்கிறார்கள். நீர்வளத்துறை அமைச்சராக இருப்பவர் கூட செய்தியாளர்களை கண்டால் திருடன் போல ஓடுகிறார்.

    எல்லாரும் ரீல்ஸ் எடுத்து போடத்தான் நினைக்கிறார்கள். ரீல்ஸ் வெறியில் தான் இருக்கிறார்கள். எங்கு சென்றாலும் ரீல்ஸ் போடுகிறார்கள். முதல்வர் விஜய் கூட காவிரி பிரச்சினை பற்றி எதுவும் பேசாமல் அதனை திசை திருப்பும் விதமாக மெட்ரோ ரயிலில் சென்று ஆய்வு என்கிற பெயரில் ரீல்ஸ் வீடியோ போடுகிறார். அதுவும் அவர் தொடங்கிய புது திடத்தில் ஆய்வு செய்தால் பரவாயில்லை. எங்கள் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை தான் ஆய்வு செய்கிறார்.

    Advertisement

    பலவீனமான அரசு

    இதை அவரது பாணியில் சொல்ல வேண்டும் என்றால் ஊரான் வீட்டு நெய்யில் உங்கள் வீட்டுக்கு ஸ்வீட் செய்யக்கூடாது என்பது தான்.. இப்படி சொன்னால் தான் அவர்களுக்கு புரியும். தமிழகத்தில் இப்போது பலவீனமான அரசு அமைந்துள்ளது. அங்கு இருக்கும் காங்கிரஸ் கட்சியினரை எதிர்த்து பேச முடியவில்லை. தண்ணீர் திறந்துவிடமாட்டோம் என சொல்கிறார். பதிலுக்கு இவர் எதுவும் பேசாமல் இருக்கிறார்.

    இப்படி பலவீனமான அரசு அமைந்துள்ளதால் தான் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கிறது. எதாவது ஒரு பிரச்சினை வந்தால் உடனே அதை அப்படியே திசை திருப்பும் செயலில்தான் அரசு ஈடுபடுகிறது. டெல்லியில் சென்று விவசாயிகள் போராடா சென்றால் மகாராஷ்டிராவில் இறக்கிவிடப்படுகின்றனர். மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி செய்கிறது. அவர்களை எதிர்த்தும் பேசாமல் இருக்கிறார். முதல்வராக பதவியேற்ற பிறகும் பாஜக என்ற சொல்லை இதுவரை விஜய் சொல்லவில்லை. அவ்வளவு பயம்..

    Advertisement

    ஏன் அடுத்த ஜென்மம் வரை வெயிட் பண்றீங்க

    தேர்தலுக்கு முன்பு அடுத்த ஜென்மம் என்று வந்தால் விவசாயியாக பிறக்க வேண்டும் என விஜய் சொன்னார்.. ஏன் அடுத்த ஜென்மம் வரை வெயிட் பண்ணனும், இப்போதே விவசாயி ஆக முடியாதா?.. காவிரி விவகாரத்தில் சட்டசபையில் திமுக கேள்வி எழுப்பும். இதுவரை விவசாயிகளுக்கு அரசு என்ன செய்தது.. விவசாயிகளை கூப்பிட்டு அவர்களது கோரிக்கையாவது கேட்டதா?.. என்று கூறினார்.

    English Summary

    Udhayanidhi Stalin, Opposition Leader, has stated that the Tamil Nadu government has become ineffective regarding the Cauvery issue, describing the ministers collectively as "jokers." He remarked that the Karnataka government is attempting to build the Mekedatu dam precisely because there is a weak government in Tamil Nadu.