உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ்

  • தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் கள்ளக்காதல் விவகாரத்தில், மனைவியைக் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு 5 வயதுக் குழந்தையுடன் கணவன் தலைமறைவான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன் மனைவி வீட்டில் இன்னொரு நபருடன் இருந்ததைக் கையும் களவுமாகப் பிடித்து வீடியோ வெளியிட்ட கணவன், சமூக வலைத்தளங்களில் உருக்கமான மரண வாக்குமூலப் பதிவுகளைப் பகிர்ந்துவிட்டுத் தப்பியோடிய நிலையில், தற்போது இந்த சம்பவத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. என்ன நடந்தது?

    Advertisement

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மயில் பாளையம் பகுதியில் வசித்து வருபவர்கள் தர்மராஜ் - அட்சயா தம்பதியினர். இவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    Advertisement

    அட்சயாவிற்கு வேறு நபருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் - மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினமும் மீண்டும் கணவனுக்கும் - மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் தாங்காமல் தர்மராஜ் மனைவியை முகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு குழந்தையுடன் தலைமறைவாகிவிட்டார்.

    என்ன டிரஸ்ஸு இது

    முன்னதாக, தன் மனைவி வீட்டில் மற்றொரு நபர் இருப்பதை கையும் களவுமாகப் பிடிப்பட்டதை வீடியோ எடுத்து வெளியிட்டார் தர்மராஜ்.. அந்த வீடியோவில் மனைவியிடம், "இது என்ன டிரஸ்ஸு? அவனை வெளியே வர சொல்லு. உள்ளே யாரு, வெளியே வர சொல்லு, என் பொண்டாட்டியுடன் ஏன் ஸ்டே பண்ணுறே? என்று கொந்தளித்து கதறியிருந்தார்.

    Advertisement

    மற்றொரு வீடியோவில், தன் மகனை முன்னால் நிறுத்தி, "என்னை மன்னிச்சிடுடுடா தம்பி" என்று 5 வயது சிறுவனிடம் கண்ணீர் விட்டுக் கதறும் போது அவன், "எனக்குப் பயமா இருக்குப்பா" என்று கதறுவது காண்போர் மனங்களை கலங்கடித்தது..

    அடுத்த வீடியோவில் "நான் செத்துட்டா நீ நல்லா வளரவேண்டும். நான் உன் கூடவே இருந்து பார்த்துக்குவேன்" என்று சொல்வதும் மனதைப் பதைபதைக்க வைத்தது.

    தண்டனை வாங்கி கொடுங்க

    இன்னொரு வீடியோவில் "காவல்துறைக்கு வணக்கம். இன்னைக்கு என் குடும்பமே அழிந்து விட்டது. என் பிள்ளையும் என்னுடன சேர்ந்து சாக போகிறான்.. என் குடும்பமே நாசமா போச்சு. இது எல்லாத்துக்கும் காரணம் திருச்சி ஜோசுதான்.. அவன்கூட பழகாதே, பேசாதேன்னு என் பொண்டாட்டி கிட்ட பலமுறை சொன்னேன். தயவுசெய்து ஜோசுக்கு ஏதாவது தண்டனை வாங்கி கொடுங்க. இல்லாட்டி இன்னொரு குடும்பம் நாசமா போயிடும் என்று அழுதபடியே வீடியோவில் பேசியிருந்தார்.

    Advertisement

    மேற்கண்ட வீடியோக்கள் அனைத்துமே பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்த நடவடிக்கையில் போலீசார் உடனடியாக இறங்கினார்கள்..

    கன்னம் அறுபட்ட நிலையில் அட்சயா

    அப்போதுதான், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கழுத்து, கன்னத்தில் அறுபட்ட நிலையில் தர்மராஜ் மனைவி அட்சயா சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டது தெரியவந்தது.. "என் கணவன் போதையில் கத்தியால் கிழித்துவிட்டான்" என்று அட்சயா சொல்லவும், அங்கு வந்த போலிசார் அடையாளம் கண்டு வீடியோவில் உள்ள பெண் இவர் தான் என்பதை உறுதி செய்தனர்..

    உடனடியாக குழந்தையுடன் தலைமறைவான தர்மராஜை தேடத் தொடங்கினார்கள். நேற்று மதியம் தஞ்சாவூர் அருகே வல்லத்தில் குழந்தை இருப்பதாக தகவல் கிடைத்து அங்கு சென்ற தனிப்படை போலிசார் குழந்தையை மீட்டு தஞ்சாவூர் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதேபோல தர்மராஜையும் தனிப்படை போலீசார் மீட்டு, பட்டுக்கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    Advertisement

    திருந்தாத அட்சயா?

    பிறகு தர்மராஜிடம் முதல்கட்டமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. அதில் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.. கறம்பக்குடி அருகே உள்ள நெய்வேலி கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் டிரைவராக உள்ளாராம்.. 25 வயது அட்சயாவை திருமணம் செய்து திருச்சியில் வாடகை வீட்டில் குடியிருந்துள்ளார்.

    தர்மராஜ் வீட்டில் இல்லாதபோது இன்ஸ்டாகிரராமில் நிறைய நேரம் செலவிட்டு வருவாராம் அட்சயா.. அப்போதுதான் ஜோஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. அடிக்கடி அட்சயா வீட்டிற்கும் ஜோஸ் வந்து சென்றுள்ளார். இது தெரிந்து மனைவியைக் கண்டித்தும் அட்சயா திருந்தவில்லையாம். ஒருமுறை ஜோஸ், தன் மனைவியோடு வீட்டுக்குள் இருக்கும்போது கையும் களவுமாக பிடித்துள்ளார் தர்மராஜ்.

    Advertisement

    பிரிந்து சேர்ந்த தம்பதி

    இந்த கோபத்தில் 1 ஒரு வருடமாக தம்பதி இருவரும் பிரிந்து இருந்தார்களாம்.. கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் பட்டுக்கோட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.. ஆனால் மீண்டும் அங்கு ஜோஸ் வந்துவிட்டதால் இப்படியொரு அசம்பாவிதம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது..

    இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தள தவறான சாட்டிங் நிறைய குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தி கொண்டிரக்கிறது.. பிஞ்சுக்குழந்தைகள் உள்படப் பல உயிர்களை காவு வாங்கி கொண்டிருக்கிறது.. இதெல்லாம் எப்போது முடிவுக்கு வருமோ???

    English Summary

    Who is inside? Tell him to come out!" Wife caught red-handed! Thanjavur police corner fleeing husband