அது நடக்காமலேயே போயிடுச்சு.. பாரதிராஜாவிற்கு தேனியில் அஞ்சலி செலுத்திய கருணாஸ் உருக்கமான பேட்டி

  • தேனி: இயக்குநர் பாரதிராஜாவின் படத்தில் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டுமென ஆசைப்பட்டேன் ஆனால் அது நடைபெறவில்லை; அவரின் இழப்பு தமிழ் உலகத்திற்கு மட்டுமில்லாமல் தமிழ் சமுதாயத்திற்கும் மிகப்பெரிய இழப்பு என முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் பேட்டி அளித்துள்ளார். தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சமூகம் இழந்து நிற்கிறது என்று தனது இரங்கலை பகிர்ந்து கொண்டார்.

    Advertisement

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே காட் ரோடு பகுதியில் உள்ள பாரதிராஜாவின் பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முன்னாள் பல்வேறு அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள் மாற்றுக் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் இருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாரதிராஜாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவரது குடும்பத்தாருக்கு தனது ஆறுதலை தெரிவித்தார்.

    Advertisement

    முன்னதாக பாரதிராஜான உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடிகர் வடிவேலு மற்றும் வைரமுத்து ஆகியோர் வருகை தந்தனர். பாரதிராஜாவின் உடலைப் பார்த்து நடிகர் வடிவேலு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். அதேபோல் பாரதிராஜாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய செல்லூர் ராஜு அவரது குடும்பத்தாருக்கு தனது ஆறுதலை தெரிவித்து கொண்டார்

    மேலும் பாரதிராஜா உடலுக்கு முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அஞ்சலி செலுத்தினார் . அவரது குடும்பத்தாருக்கு தனது ஆறுதலை தெரிவித்த கருணாஸ் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    Advertisement

    அப்போது அவர் கூறுகையில், " இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உயிரிழப்பு ஒட்டுமொத்த சினிமா துறையின் மிகப்பெரிய இழப்பு. அவரது படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்து விட ஆசைப்படும் பல கலைஞர்களின் நானும் ஒருவன் ஆனால் அது நடைபெறவில்லை. தமிழ் சமூகத்திற்கு அவர் ஆற்றிய பங்கும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு அளித்து தமிழர் நலனுக்காக முன்னின்றவர்.

    தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சமூகம் இழந்து நிற்கிறது. அவரை இழந்து வாழும் அவரது குடும்பத்தாருக்கு எனது சார்பாகவும் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் " இவ்வாறு தெரிவித்தார்.

    English Summary

    Karunas, leader of the Mukkulathor Pulipadai, stated in an interview that he had wished to act in at least one scene in a film directed by Bharathiraja, but that wish remained unfulfilled; he added that Bharathiraja's passing is a massive loss not only to the Tamil film world but to Tamil society as a whole.