தாம்பரம் டூ போடிநாயக்கனூர் செல்லும் சிறப்பு ரயில் உள்பட ஏழு சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

  • தேனி: எழும்பூர்-கன்னியாகுமரி, தாம்பரத்தில் இருந்து போடிநாயக்கனூர் செல்லும் சிறப்பு ரயில், தாம்பரம்-நெல்லை ரயில், சென்னை சென்ட்ரல்-போத்தனூர் ரயில், மங்களூரு சென்ட்ரலில் இருந்து எழும்பூர் செல்லும் சிறப்பு ரயில் உள்பட 7 சிறப்பு ரயில்கள் அக்டோபர் இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    Advertisement

    பொதுவாக ஒரு ரயிலை ஒரு பகுதிக்கு விடும் முன்பு, அந்த பகுதியில் பகுதி நேரமாக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவிப்பது வழக்கம். அதுவும் வார இறுதிகளில் அல்லது வாரத்தில் இரண்டு நாட்கள் அறிவிப்பது வழக்கம் ஆகும். அப்படி அறிவிக்கப்படும் சிறப்பு ரயில்கள் எத்தனை நாட்கள் ஓடும் என்பதை வருவாய் அடிப்படையில் ரயில்வே முடிவு செய்யும்.

    Advertisement

    நல்ல வரவேற்பு இருக்கிறது,ஏசி பெட்டிகள் மற்றும் உயர்ரக பெட்டிகளில் மக்கள் அதிக அளவில் ஏறுகிறார்கள், காத்திருப்பு பட்டியல் அதிகமாக உள்ளது என்பதை அறிந்தால், அப்படியே வாரத்தில் சில நாட்களாக மாற்றும், பின்னர் படிப்படியாக மாற்றி தினமும் செல்லும் ரயிலாக அந்த ரயில்களை அறிவிக்கும் வழக்கத்தை ரயில்வே பின்பற்றி வருகிறது. அந்த வகையில் ஏழு சிறப்பு ரயில்கள் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகிறது. அவை தற்போது அக்டோபர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "தாம்பரத்தில் இருந்து போடிநாயக்கனூர் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்.06059), வருகிற 12-ந்தேதி முதல் அக்டோபர் 24-ந்தேதி (சனிக்கிழமை மட்டும்) வரையிலும், மறுமார்க்கமாக, போடிநாயக்கனூரில் இருந்து தாம்பரம் வரும் சிறப்பு ரயில் (06060), வருகிற 13-ந்தேதி முதல் அக்டோபர் 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    எழும்பூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரயில் (06045), நாளை (4-ந்தேதி) முதல் 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரையிலும், மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து எழும்பூர் வரும் சிறப்பு ரயில் (06046), வருகிற 6-ந்தேதி முதல் 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சென்னை சென்ட்ரல்-போத்தனூர் ரயில்

    மங்களூரு சென்ட்ரலில் இருந்து எழும்பூர் செல்லும் சிறப்பு ரயில் (06126), வருகிற 7-ந்தேதி முதல் அக்டோபர் 26-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து மங்களூரு சென்ட்ரல் செல்லும் சிறப்பு ரயில் (06125), வருகிற 8-ந்தேதி முதல் அக்டோபர் 27-ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    போத்தனூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் சிறப்பு ரயில் (06028), நாளை (4-ந்தேதி) முதல் வருகிற நவம்பர் 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) வரையிலும், மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூர் செல்லும் சிறப்பு ரயில் (06027), நாளை (4-ந்தேதி) முதல் வருகிற நவம்பர் 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தாம்பரம்-நெல்லை ரயில்

    நெல்லையில் இருந்து தாம்பரம் வரும் சிறப்பு ரயில் (06166), வருகிற 6-ந்தேதி முதல் 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரையிலும், மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து நெல்லை செல்லும் சிறப்பு ரயில் (06165), வருகிற 7-ந்தேதி முதல் 28-ந்தேதி (திங்கட்கிழமை) வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    நெல்லையில் இருந்து தாம்பரம் வரும் சிறப்பு ரயில் (06070), இன்று (3-ந்தேதி) முதல் அக்டோபர் 29-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து நெல்லை செல்லும் சிறப்பு ரயில் (06069), நாளை (4-ந்தேதி) முதல் அக்டோபர் 30-ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு ரயில் (06030), வருகிற 6-ந்தேதி முதல் நவம்பர் 29-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லை செல்லும் சிறப்பு ரயில் (06029), வருகிற 7-ந்தேதி முதல் நவம்பர் 30-ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Southern Railway has announced the extension of seven special trains—including the Egmore–Kanyakumari train, the special train from Tambaram to Bodinayakanur, the Tambaram–Nellai train, the Chennai Central–Podanur train, and the special train from Mangaluru Central to Egmore—until the end of October.