பட்டா பெயர் மாற்றம் செய்யாத நிலத்தை வாங்கலாமா.. மக்களுக்கு தெரியாத வில்லங்கம் என்ன?

  • தேனி: தேனியின் புறநகர் பகுதியில் இடம் வாங்கியகுடும்பத்தினர், தேவைக்காக அதனை விற்க வேண்டும் என்று போயிருக்கிறார். ஆனால் அந்த நிலத்திற்கு பட்டாவை அந்த காலத்தில் வாங்காமல் விட்டுவிட்டார்கள். இப்போது போய் கேட்டால், அந்த நிலம் பஞ்சமி நிலம் என்று கூறியிருக்கிறார்கள். இன்னொருவருக்கு கள்ளர் ஜாதி நிலம் என்று கூறியிருக்கிறார்கள். அவர்கள் ஆடிப்போனார்கள்.. நிலத்தை விற்க முடியாமல் தவிக்கிறார்கள். பொதுவாக இப்படிப்பட்ட நிலத்தை வாங்கியவர்களுக்கு பட்டாவே கிடைக்காது. அதேபோல் வேறு சில நிலங்களுக்குமே பட்டா கிடைப்பது இல்லை.. நாம் இப்போது பார்க்க போவது பட்டா பெயர் மாற்றம் செய்யாத நிலத்தை வாங்கலாமா என்பது தான்.. ஒரே வழியில் சொல்வது என்றால், வேண்டாம் என்பதுதான்.

    Advertisement

    அதேநேரம் நிலத்தின் உரிமையாளரிடம் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றிவருவாருங்கள். அப்படி மாற்றித்தந்தால், நிலத்தை வாங்கி கொள்கிறேன் என்று கூறுங்கள். ஏனெனில் நீங்கள் வாங்க போகும் இடத்தின் உரிமையாளர் பெயர் பத்திரத்தில் இருந்தாலும், பட்டாவில் பழைய உரிமையாளர் பெயர் இருந்தால். அவரோ அல்லது அவரது வாரிசுகளோ அந்த நிலத்தை உங்களுக்குத் தெரியாமல் வேறு ஒருவருக்கு விற்கவோ அல்லது அடமானம் வைக்கவோ வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

    Advertisement

    அதேபோல் பத்திரத்தில் உள்ள நபர் இறந்துவிட்டால், அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் ஏதாவது ஒரு சூழலில் உரிமை கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவதற்கு வாய்ப்பு அதிகம். அதேபோல் நிலத்தை சிலர் குறைந்த விலைக்கு வாங்கி இருப்பார்கள். ஆனால் அப்படி குறைந்த விலைக்கு வாங்கியவர்கள் அந்த நிலத்தை அவர்கள் கிரையம் செய்துவிட்டு பட்டா வாங்காமல் சில ஆண்டுகள் விட்டிருப்பார்கள்.

    அந்த சூழலில் திடீரென அங்கு பேருந்து நிலையம், தேசிய நெடுஞ்சாலை, கோர்ட், ஆர்டிஓ அலுவலகம், பள்ளி ஏதாவது வந்து நிலத்தின் மதிப்பு சட்டென ஏறியதை பார்த்ததுமே, ஏமாற்றி வாங்கிவிட்டதாக நிலத்தை விற்றவர்கள் கூறுவார்கள். அத்துடன் வழக்கும் போடுவார்கள். பட்டா இன்னும் பழைய உரிமையாளர் பெயரிலேயே இருப்பதால், அதை வைத்துக்கொண்டு வேறு ஒருவருக்குப் போலியாக மீண்டும் விற்கவோ அல்லது அடமானம் வைக்கவோ முயற்சியும் செய்வார்கள். எனவே பட்டாவை கையோடு மாற்றிவிடுவது தான் நல்லது. அப்படி பட்டாவை மாற்றாவிட்டால் நிலத்தை விற்க முடியாது.இப்படியான வில்லங்கம் உள்ள நிலங்களை வாங்குவதும் சிக்கலாக முடியும்.

    Advertisement

    பொதுவாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், வீடு கட்ட அல்லது வீடு அடமான கடன் தர வேண்டும் என்றால், பட்டாவை தான் கேட்பார்கள். பட்டா இல்லாத நிலம் என்றால் எந்த வங்கியும் கடன் தருவது இல்லை.. பட்டா இல்லாத நிலம் என்றால் யாருமே வாங்குவதற்கு தயங்கே செய்வார்கள். எனவே ஒரு நிலம் நல்ல நிலம், அந்த நிலத்தை வாங்க வேண்டும் என்றால், அவரிடம், நீங்கள் சொல்ல வேண்டியது.., முதலில் உங்கள் பெயருக்குப் பட்டாவை மாற்றிக் கொண்டு வாருங்கள், அதன் பிறகு கிரையம் முடித்துக் கொள்ளலாம்" என்று கூறுங்கள். அப்படி அவர் தமிழ்நாட்டில் ஆன்லைன் (e-Services / Tamil Nilam) மூலமாகப் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தால் சில நாட்களிலேயே பட்டா அவர் பெயருக்கு மாறிவிடும்.

    Advertisement

    ஒருவேளை பட்டா மாற்றம் செய்ய தாமதம் ஏற்படுகிறது. தாசில்தார் தராமல் இழுக்கிறார் என்றால், நல்ல ஒரு வழக்கறிஞரிடம் தாய் பத்திரங்கள் மற்றும் 30 ஆண்டு கால வில்லங்கச் சான்றைச் சரிபார்த்து , பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பியுங்கள். வில்லங்கம் இல்லை என்பதை உறுதி செய்தேபட்டா தருவார்கள். வில்லங்கம் இருந்தால் பட்டா கிடைக்காது. எனவே பட்டாவை வாங்கிய பின்னரே, நீங்கள் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும். அவசரப்பட்டு முன்தொகை கொடுப்பது, பெரிய தொகை கொடுத்து நிலத்தை வாங்கி கொள்வதாகவோ ஒப்பந்தம் போட வேண்டாம்.

    English Summary

    Should you buy land where the Patta name hasn't been transferred? What are the hidden encumbrances the public is unaware of?