Theni: தேனி சிறையில் 17 கைதிகள் தப்பியது எப்படி? மூளையாக செயல்பட்டது யார்? எஸ்பி விஷ்ணு பிரியா பேட்டி

  • சென்னை: சிறையில் இருந்த சமையல் கரண்டியை வைத்து சிறை காவலர்களை தாக்கி தப்பி சென்றதாகவும், சிறையில் இருந்து தப்பிப்பதற்காக "லிங்க பிரசாத்" என்ற சிறைக்கைதிதான் மூளையாக செயல்பட்டதாகவும் ஆண்டிபட்டி துணை காவல் கண்காணிப்பாளர் விஷ்ணு பிரியா கூறியுள்ளார். மேலும், 17 கைதிகளில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவருக்கும் ஒருவருக்கிடையே ஒருவருக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    Advertisement

    புழல் சிறையில் இருந்து அடுத்தடுத்து கைதிகள் தப்பிய ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், கடந்த 26 ஆம் தேதி இரவு 10 மணியளவில் தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓடியது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் 17 பேரையும் நேற்று கைது செய்தனர்.

    Advertisement

    எப்படி தப்பி ஓடினர்?

    இந்நிலையில் 17 சிறை கைதிகள் தப்பி ஓடியது எப்படி? இதற்கு மூளையாக செயல்பட்டது யார்? யார் யார் மீது என்ன என்ன வழக்குகள் உள்ளது? என்பது குறித்து ஆண்டிபட்டி துணை காவல் கண்காணிப்பாளர் விஷ்ணு பிரியா செய்தியாளர்களுக்கு விரிவாக பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    17 சிறை கைதிகள் தேக்கம்பட்டி சிறையிலிருந்து தப்பிவிட்டதாக சிறைத்துறையில் இருந்து போலீசாருக்கு தகவல் வந்ததும் உடனடியாக தமிழகம் முழுவதும் பாதுகாப்பை தீவிரபடுத்தினோம். முதல் 24 மணி நேரத்தில் 13 சிறை கைதிகளை கைது செய்தோம், அடுத்த 12 மணி நேரத்தில் 4 கைதிகளை கைது செய்தோம். தப்பி ஓடிய 17 சிறை கைதிகளில் லிங்க பிரசாத் மீது 3 குண்டாஸ் வழக்குகளும், கருப்பசாமி, ராஜ்குமார், தருண் குமார் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் மீது ஒரு குண்டாஸ் வழக்குகள் மற்றும் மற்ற 12 சிறைக் கைதிகள் மீது திருட்டு வழக்கு வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.

    Advertisement
    Prison Break: தேனி சிறை சம்பவம்! ஆட்டோவில் தப்பிச் செல்ல முயன்ற சிறை கைதியை மடக்கி பிடித்த தனிப்படை

    மூளையாக செயல்பட்ட லிங்க பிரசாத்

    சிறையில் இருந்து தப்பிப்பதற்காக லிங்க பிரசாத் என்ற சிறைக்கைதிதான் மூளையாக செயல்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர் ஏன் சிறையில் இருந்து தப்பினார் என்று விசாரித்த போது பிணையில் இருந்து வெளியே வர முடியாத நிலையில் அவர் மீது வழக்குகள் இருந்துள்ளது. இதுமட்டுமின்றி, இனிமேல் சிறையில் இருந்து வெளியே வர முடியாது என்ற நிலையில் இருந்ததால் தான் சிறையில் இருந்து தப்பிக்க திட்டமிட்டுள்ளார் என்பது தெரியவந்தது.

    Advertisement

    கைதான 17 சிறை கைதிகளையும் பாளையங்கோட்டை, கோவை, கடலூர், சேலம் உள்ளிட்ட சிறையில் பிரித்துப் பிரித்து அடைத்து இருக்கிறோம். சிறையில் இருந்து கைதிகளை தப்பியதாக தகவல் வந்த நிலையில் முதல் குற்றவாளியை சிறிது நேரத்திற்குள் கைது செய்தோம், தொடர்ந்து மலைகளில் பதுங்கி இருந்த கைதிகளை தேடுவதில் சவால்கள் நிறைந்து இருந்தது. இதனைத் தொடர்ந்து 17 தனிப்படைகள் அமைத்து சிறை கைதிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தினோம்.

    ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லை

    மேலும் மாவட்ட எல்லைகளில் தீவிர சோதனை செய்ததால் கைதிகள் யாரும் மாவட்ட எல்லையை கடந்து செல்லவில்லை என்பதை உறுதி செய்தோம். கூடலூர் அருகில் கேரளாவிற்கு தப்பி செல்ல முயன்ற சகோதரர்களான 2 பேரை (மீனாட்சி சுந்தரம், திருப்பதி) கூடலூர் புறவழிச்சாலை அருகே கைது செய்தோம். சிறையிலிருந்து தப்பி சென்ற 17 கைதிகளில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவருக்கும் ஒருவருக்கிடையே ஒருவருக்கு எந்த தொடர்பும் இல்லை.

    Advertisement
    தேனி சிறையில் இருந்து தப்பிய கைதிகளில் 7 பேர் கொலை வழக்கில் கைதானவர்கள்.. வெளிவந்த திடுக் ரிப்போர்ட்

    கொலை செய்வதற்காக பணத்தைப் பெற்றுக் கொண்டு சிறையில் இருந்து தப்பியதாக போன்ற பல்வேறு தகவல்களும் வதந்திகள் மட்டுமே முறையான விசாரணை செய்த பின்பு தான் அனைத்தும் தெரியவரும். லிங்க பிரசாத் மேல் 26 வழக்கு உள்ளது, 3 குண்டாஸ் உள்ளது. கூடலூர் புறவழிச்சாலை அருகே லிஃப்ட் கேட்டு நின்று இருந்த மீனாட்சி சுந்தரம், திருப்பதி ஆகிய சகோதரர்களை கைது செய்தோம். ரயில் தண்டாவலம் வழியாக கைதிகள் தப்பிச்செல்ல வாய்ப்பு இருந்ததால் தண்டவாளம் வழியாகவே நடந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினோம்.

    Advertisement

    சிறையில் இருந்த சமையல் கரண்டி

    சிறைக்கைதிகள் யாரேனும் மக்களை தொடர்புகொள்ள முயன்றபோது எங்களுக்கு உடனடியாக தகவல் கிடைத்துள்ளது, மக்கள் விழிப்புணர்வு ஏற்பட்டு இருந்ததால் ஊரில் யாரேனும் புதிதாக வந்தால் எங்களுக்கு தகவல் தெரிவித்து விடுகின்றனர். சிறையில் இருந்த சமையல் கரண்டியை வைத்து சிறை காவலர்களை தாக்கி விட்டு அவரிடம் இருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

    தேனி JAIL BREAKING.. எஸ்கேப் ப்ளானைப் போட்டுக் கொடுத்ததே இவன் தானா? தென்மண்டல ஐஜி அதிர்ச்சி தகவல்!

    காலில் செருப்புகள் இல்லாமல் தப்பிச் சென்ற நிலையில் கரடு முரடான மலையில் ஏறிய போது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கைதிகள் அணிந்திருந்த சட்டையை கிழித்து காலில் வைத்து கட்டி மலை ஏறி நடந்து சென்றுள்ளனர். தங்களது உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி கைதிகள் தப்பி ஓடி 36 மணி நேரத்தில் 17 கைதிகளையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். என்று கூறினார்.

    English Summary

    Theni Jail: Andipatti Deputy Superintendent of Police (DSP) Vishnu Priya stated that the prisoners escaped after attacking the jail guards using a cooking ladle from the prison. She revealed that an inmate named "Lingaprasad" acted as the mastermind behind the escape. Furthermore, she noted that, with the exception of a few, the 17 prisoners had no prior connection to one another.