Theni SSI: தேனி எஸ்எஸ்ஐ செந்தில் குமார் நெஞ்சில் முழங்கையால் குத்தியதால் இறப்பு! காவல் துறை விளக்கம்

  • தேனி: தேனி எஸ்எஸ்ஐ செந்தில் குமாரின் நெஞ்சில் முழங்கையால் குத்தியதால் ஏற்கெனவே இதய பிரச்சனை இருந்த அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார் என தேனி காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

    Advertisement

    தேனி அல்லிநகரம் பகுதியில் உள்ள கணபதி நகரைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (55). இவர் 1995 ஆம் ஆண்டு காவல் துறை பணியில் சேர்ந்தார். சிறப்பு சார்பு ஆய்வாளராக தேனி அருகே பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

    Advertisement

    இந்த நிலையில் தேனி துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிந்து வந்த இவர் தீபாவளி பண்டிகை தினமான நேற்று இரவு பணி முடிந்து பைக்கில் சாதாரண உடையில் அல்லிநகரத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார்.

    இடையூறாக பட்டாசு வெடித்த கும்பல்

    சமதர்மபுரம் வழியாக சென்ற போது இளைஞர்கள் சிலர் சாலையை மறித்துக் கொண்டு பட்டாசு வெடித்து அதை ரீல்ஸ் வீடியோவாக எடுத்து வந்தனராம். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் கலைந்து செல்லுமாறு செந்தில் குமார் கூறினாராம்.

    அமரர் ஊர்தி வராததால் மூதாட்டியின் உடலை தள்ளு வண்டியில் எடுத்துச் சென்ற அவலம்.. தேனி அருகே சோகம்!
    Advertisement

    போதை கும்பல்

    அப்போது அவரிடம் போதையில் இருந்த அந்த கும்பல் வாக்குவாதம் செய்தனராம். இதையடுத்து அவர்கள் தொடர்ந்து அத்துமீறுவதை செந்தில் குமார் தனது செல்போனில் வீடியோ எடுத்தாராம். அப்போது அவர் மீது அந்த நபர்கள் தாக்கியதில் செந்தில்குமார் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து போலீஸார் தீவிர சோதனைக்கு பிறகு 3 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்கள் மூவருடன் வேறு யாராவது இருந்தனரா என்று கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.

    காவல் துறை விளக்கம்

    இந்த சம்பவம் குறித்து தேனி காவல் துறை விளக்கமளித்துள்ளது. அந்த விளக்கத்தில் அவர்கள் கூறியதாவது: டிஎஸ்பி அலுவலகத்தில் பணியாற்றி வந்த செந்தில் குமார் போலீஸ் உடுப்பு இல்லாமல் சாதாரண சீருடையில் வீட்டிற்கு இரவு 10.30 மணிக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    Advertisement

    ரீல்ஸ் எடுத்து பட்டாசு

    அப்போது சமதர்மபுரம் அருகே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் சிலர் பட்டாசு வெடித்தும், ரீல்ஸ் எடுத்தும் போதையில் தீபாவளியை கொண்டாடினர். அப்போது அவர்களை கலைந்து போக சொன்ன செந்தில் குமாரிடம் அவர்கள் வாக்குவாதம் செய்தனர்.

    மானாமதுரையில் ஜாமீனில் வந்த ரவுடி வெட்டிக் கொலை.. தீபாவளி நாளில் தமிழகத்தில் மேலும் 7 கொலைகள்

    இதையடுத்து செந்தில் குமார் அங்கு நிகழ்ந்த நிகழ்வுகளை தனது செல்போனில் வீடியோ எடுத்தார். அப்போது அந்த கும்பலில் இருந்த ஒரு இளைஞர், அவரது செல்போனை பறித்து கொண்டு செந்தில் குமாரின் நெஞ்சில் முழங்காய் ஓங்கி அடித்துள்ளார்.

    Advertisement

    மயங்கிய எஸ்எஸ்ஐ

    இதில் ஏற்கெனவே இதய பிரச்சினை இருந்த செந்தில் குமார் அங்கேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அந்த போதை கும்பல் அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் செந்தில் குமாரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    தேனி மாவட்ட எஸ்பி

    தகவலறிந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கௌதம், தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை விரைந்து பிடிக்க தேனி போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தார். சம்பவ இடமான சமதர்மபுரத்திலேயே போலீஸார் முகாமிட்டு 3 பேரை கைது செய்துள்ளனர். இவ்வாறு காவல் துறை அறிவித்துள்ளது.

    Advertisement

    தீபாவளி அன்று இரவு வீடு திரும்பிய எஸ்எஸ்ஐ போதை கும்பலால் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Topics: #தேனி

    English Summary

    Theni Police explains how Theni SSI hacked to death by drunkards near Samadharmapuram?