மேகமலை: ஒய்வுபெற்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்! அடுத்து என்ன?

  • தேனி: மேகமலை வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமப்புகளை ஆய்வு செய்ய, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் தலைமையில் குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

    Advertisement

    தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில் 4,601 பேர் சுமார் 5,072 ஹெக்டர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக புகார். இந்த நிலத்திலிருந்து ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கின் மீதான விசாரணையில், தற்போது உத்தரவு வெளியாகி இருக்கிறது.

    Advertisement

    மேகமலை பகுதியை விரிவுப்படுத்தப்பட்ட புலிகள் காப்பகமாக கடந்த 2021ல் மத்திய அரசு அறிவித்தது. அறிவிப்பெல்லாம் ஓகேதான்.. புலிகள் வாழ இடம் இருக்கு.. கடந்த 1919 முதல் இங்கு வாழ்ந்து வரும் மக்களுக்கு இடம் எங்கே என்பதுதான் பிரச்சனை. இந்த விஷயத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றம் கறாரான உத்தரவை போட்டது. அதாவது, வனப்பகுதிகளுக்குள் இருந்து அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என்பதுதான் உத்தரவு. மக்கள் கொதித்து எழுந்தார்கள்.. போராட்டங்களை நடத்தினார்கள்.

    நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின்படி இந்த பகுதியில் மொத்தம் 4 பிரிவுகளாக மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

    Advertisement

    1. முதல் பிரிவினர் காடுகளுக்குள் புகுந்து வணிக நோக்கில் பெரிய அளவில் இலவம் பஞ்சு மற்றும் முந்திரி தோட்டங்களை அமைத்திருக்கிறார்கள்.

    2. இரண்டாம் பிரிவினர், சுற்றுலா மற்றும் தனியார் தங்கும் விடுதிகளை வைத்து நடத்துபவர்கள். இவர்கள் எந்த அனுமதியும் இல்லாமல், காடுகளுக்குள் 12க்கும் மேற்பட்ட சட்டவிரோத சொகுசு விடுதிகளை கட்டி, அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார்கள்.

    3. மூன்றாம் பிரிவினர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஊழியர்கள் ஆவார்கள். அதாவது 118 அரசு ஊழியர்கள் இந்த வனப்பகுதியை ஆக்கிரமித்துள்ளது கண்டறியப்பட்டிருக்கிறது.

    4. இறுதியாக உள்ள மக்கள், இந்த பகுதியின் பூர்வகுடிகளாவார்கள். சுமார் 98 மலை கிராமங்களை சேர்ந்த இவர்கள், 5000 குடும்பங்களாக வாழ்ந்து வருகிறார்கள். பிரிட்டிஷ் காலம் முதல் கொண்டே.. இந்த மலை சரிவில் இவர்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை நம்பி வாழ்ந்து வருகிறார்கள். இவர்களிடம் இங்கு வசிப்பதற்கான முறையான பட்டாக்கள் கூட இல்லை.

    Advertisement
    4வது நாளாக தொடரும் மேகமலை வருசநாடு மக்கள் போராட்டம்.. பல்வேறு சங்கங்கள், அரசியல் கட்சிகள் ஆதரவு!

    இப்படி இருக்கையில் இவர்களை வெளியேற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பித்தது பெரும் பிரச்சனையாகியிருக்கிறது. இந்த பின்னணியில்தான் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் உயர்மட்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த குழு 5 மாதங்களுக்குள் மேகமலை ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பழங்குடியினர் யார்? மற்றவர்கள் எத்தனை பேர்? என்பதை பதிவு செய்து அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். மேலும் மேகமலையில் உள்ள கிராமங்களில்.. 30 நாட்களுக்குள் தமிழ்நாடு அரசு கிராம சபைகளை உருவாக்க வேண்டும் என்று தெரியப்படுத்தியிருக்கிறது.

    English Summary

    Meghamalai: The Supreme Court has ordered the formation of a committee, headed by retired Supreme Court Chief Justice B.R. Gavai, to examine the encroachments in the Meghamalai forest area.