ஸ்டாலினை விட்டு ஓபிஎஸ் பிரிகிறாரா? இதுதான் காரணமா? தேனி ரவீந்திரநாத் போட்ட பிளான்

  • தேனி: ஓ.பன்னீர்செல்வம் திடீரென தமிழக வெற்றி கழகத்தில் இணையப் போவதாக வரும் செய்திகள் அரசியல் வட்டாரத்தில் பெரிய ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன. அதிமுக, திமுக என அடுத்தடுத்து பயணித்த ஓபிஎஸ், இப்போது விஜய்யின் கட்சியைத் தேர்ந்தெடுப்பது பல கேள்விகளை எழுப்புகிறது.. இந்தத் திடீர் அரசியல் நகர்வு உண்மைதானா? பின்னணி காரணம் என்ன?

    Advertisement

    தேர்தலுக்கு முன்பேயே இப்படியொரு பேச்சு கிளம்பியது.. வளர்ந்து வரும் தவெகவுடன் இணைவதன் மூலம், முடிவெடுக்கும் இடம் ஓபிஎஸ்ஸுக்கு கிடைக்கவும் வாய்ப்பிருக்கும்..

    Advertisement

    அத்துடன் புதிய தலைமுறை வாக்காளர்களை சென்றடையும் வாய்ப்பும் ஓபிஎஸ்ஸுக்கு கிடைக்கும்.. இதனால் அரசியல் சக்தியாக தன்னை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ளவும் முடியும் என்று கணக்கு போடப்பட்டது.

    ஆனால், தவெகவே முழுமையான அரசியல் வேரூன்றாத நிலையில், ஓபிஎஸ் அணிக்கு நீண்டகால அரசியல் பாதுகாப்பு கிடைக்குமா? தேசிய அளவில் செல்ல முடியாதே? புதிய கட்சியில் சேர்வதால் ஓபிஎஸ்ஸின் பாரம்பரிய ஆதரவாளர்கள் என்ன நினைப்பார்கள்? எப்படி எதிர்வினை காட்டுவார்கள்? என்றெல்லாம்கூட யோசனை வந்ததாம். அதனால்தான், தவெகவில் இணையும் கைவிட்டு, திமுகவில் இணைய முடிவெடுத்தாராம்.

    தவெகவில் ஓ.பன்னீர்செல்வம்

    இப்போது, அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், திமுகவிலிருந்து விலகி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப்போவதாக மீண்டும் செய்திகள் உலா வர ஆரம்பித்துள்ளன..

    Advertisement

    தன்னுடைய அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவும், தென் மாவட்டங்களில் தனக்குள்ள பாரம்பரிய செல்வாக்கை நிரூபிக்கவும் ஓபிஎஸ் பல முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறார்.. திமுகவில் இணைந்தும்கூட, எதிர்பார்த்த பலன் ஓபிஎஸ்ஸுக்கு கிடைக்கவில்லையாம்.

    திமுக கூட்டணிக்குள் ஓபிஎஸ் வந்தபோதிலும், கட்சித் தலைமை அவருக்கு உரிய முக்கியத்துவத்தையோ அல்லது அதிகாரப்பூர்வ பொறுப்புகளையோ இதுவரை வழங்கவில்லை என்ற அதிருப்தி ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே புகைந்துகொண்டே இருந்தது. ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ்ஸுக்கு, திமுக போன்ற மூத்த கட்சியில் உடனடியாக முக்கிய பொறுப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

    தென்மாவட்ட தவெக

    கட்சியின் உட்கட்சி சூழலும், கூட்டணிக் கணக்குகளும்கூட இதற்கு காரணமாக அமைந்ததால், தான் அலட்சியப்படுத்தப்படுவதாகவே ஓபிஎஸ் உணர்ந்ததாக தெரிகிறது. இப்படிப்பட்ட சூழலில் மகன் ரவீந்திரநாத்தின் ஆலோசனையின் பேரில், தவெக பக்கம் அவரது கவனம் திரும்பியிருக்கிறதாம்..

    Advertisement

    அதேபோல தவெகவுக்கும் தென் மாவட்டங்களில், தங்களை அரசியல் ரீதியாக வலுப்படுத்த அனுபவமிக்க, முகவரி தெரிந்த ஒரு சீனியர் தலைவர் தேவைப்படுகிறார். தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஓபிஎஸ்ஸுக்கு இருக்கும் தனிப்பட்ட சமூக செல்வாக்கு, தவெகவின் தென் மண்டல அடித்தளத்தை வலுப்படுத்த உதவும் என்று தவெக தலைமையும் கணக்கு போடுகிறது.

    ரவீந்திரநாத்துக்கு தேனி தொகுதி

    ஒருவேளை தவெகவில் ஓபிஎஸ் இணையும்பட்சத்தில், தனது தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளராக களம் இறங்கி வெற்றிபெறுவதன் மூலம் தன்னுடைய சுய பலத்தை காட்ட ஓபிஎஸ் திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது.

    Advertisement

    அதுமட்டுமல்ல, வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தனது மகன் ரவீந்திரநாத்துக்குத் தேனி தொகுதியில் தவெக சார்பில் வாய்ப்பு பெறுவதும் இந்த அரசியல் நகர்வின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

    தவெக விஜய் பக்குவப்பட்ட அரசியல்

    ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை இது வெறும் கட்சி மாறுதல் மட்டுமல்ல, தனது அரசியல் வாழ்வின் பிழைப்புக்கான போராட்டம் என்றே சொல்லலாம். அதேசமயம் தவெக தலைவர் விஜய்க்கும் அதிமுக மற்றும் திமுகவின் முக்கிய புள்ளிகளைத் தன் பக்கம் இழுப்பது, தனது கட்சியை ஒரே இரவில் பக்குவப்பட்ட அரசியல் அமைப்பாக காட்ட உதவும்.

    திமுகவில் கதவுகள் அடைக்கப்பட்டதால், விஜய்யின் வரவேற்பறையை நோக்கி ஓபிஎஸ் அடியெடுத்து வைப்பதாக வெளியாகும் இந்த செய்திகள் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், நெருப்பில்லாமல் புகையுமா????

    English Summary

    O Panneerselvam (OPS) to Leave DMK? Theni Ravindhranath's Plan Sparks TVK Joining Speculation