தேனி: திமுகவில் இணைந்து 5 மாதங்களாகிவிட்ட சூழலில், இன்னும் கட்சிப் பதவி அளிக்கப்படாததால் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் அதிருப்தியில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக தவெகவில் இணைய காய்களை நகர்த்தியதாகவும், ஆனால் ஓபிஎஸ் உடன் வந்தால் மட்டுமே எதிர்பார்ப்பதில் ஓரளவிற்கு செய்ய முடியும் என்று உத்தரவாதம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் திமுகவில் ஐக்கியமாகினார். அவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்பட்டது. ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு திமுகவில் சீட் கொடுக்கப்படவில்லை. அப்போதே ஓபி ரவீந்திரநாத் அதிருப்தியில் இருந்தார். சட்டசபைத் தேர்தலில் திமுக அடைந்த தோல்விக்கு பின் ஓபிஎஸ் கூடாரமே சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டது.
ஏனென்றால் ஓபி ரவீந்திரநாத்தின் எண்ணம் தவெகவாகவே இருந்தது. அவர் விஜய் தரப்புடன் நெருக்கமாக இருந்து வந்தார். ஆனால் ஓபிஎஸ் எண்ணம் திமுகவாகவே இருந்தது. இதனால் தவெக ஆட்சிக்கு வந்ததால், ஓபி ரவீந்திரநாத் புலம்பி தீர்த்திருக்கிறார். இருப்பினும் திமுகவில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்படும் என்று காத்திருந்தனர். ஆனால் திமுகவில் இதுவரை ஓபிஎஸ் மற்றும் ஓ.பி.ரவீந்திரநாத் ஆகிய இருவருக்குமே இதுவரை கட்சிப் பொறுப்பு அளிக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ஓபி ரவீந்திரநாத், தவெக பக்கம் பேசத் தொடங்கி இருக்கிறார். தவெக தலைமையோ அவருக்கு எந்தவித பதிலையும் அளிக்கவில்லை. சுமார் ஒரு மாதங்களுக்கு மேலாக காத்திருக்க வைத்தது. இறுதியாக ஓபிஎஸ் உடன் வந்தால் மட்டுமே பரிசீலிக்க முடியும்.. நீங்கள் கேட்டவற்றில் பாதியையாவது செய்து கொடுக்க உத்தரவாதம் கொடுக்க முடியும் என்று தவெல தலைமை கூறிவிட்டது. இதன்பின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யக் கோரி ஓபிஎஸ்ஸிடம் அவரின் மகன் பேசியுள்ளார். ஆனால் ஓபிஎஸ் ராஜினாமா என்ற பேச்சிற்கே இடமில்லை என்று கூறி இருக்கிறார். இதனால் ரவீந்திரநாத் சோகம் அடைந்திருக்கிறார். திமுகவில் மறுசீரமைப்பு பேச்சுகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், தேனியில் முக்கிய பொறுப்பை கைப்பற்ற வேண்டும் என்பதில் ரவீந்திரநாத் தீவிரமாக இருக்கிறார். ஆனால் திமுக தலைமையோ ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் விசுவாசத்தை நிரூபித்த பின் பதவிகளை கொடுத்து கொள்ளலாம் என்பதில் தெளிவாக உள்ளது.