தேனி சிறையில் இருந்து தப்பிய கைதிகளில் 7 பேர் கொலை வழக்கில் கைதானவர்கள்.. வெளிவந்த திடுக் ரிப்போர்ட்

  • தேனி: தேனி சிறையில் காவலர்களை தாக்கிவிட்டு தப்பி ஓடிய கைதிகளில் 13 பேரை 24 மணி நேரத்துக்குள் போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தப்பி ஓடிய கைதிகளில் 7 பேர் கொலை வழக்கில் கைதானவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

    Advertisement

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறை உள்ளது. இந்த சிறையில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் மொத்தம் 4 பிளாக்குகளாக கைதிகள் அறைகள் உள்ளன. நேற்று இரவு இந்த சிறையில் கைதி ஒருவர் வலிப்பு வந்தது போல நாடகமாடியதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    4 பேரை தேடும் பணி தீவிரம்

    இதையடுத்து அங்கு வந்த காவலர் ஸ்டாலின் பிரபுவை கைதிகள் சிலர் சரமாரியாக தாக்கிவிட்டு, அறையை விட்டு வெளியே ஓடி வந்தனர். அடுத்தடுத்த நுழைவு வாயில்களில் நின்ற காவலர்களை தாக்கிய கைதிகள் 17 பேர் எஸ்கேப் ஆகினர். தமிழ்நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தப்பி ஓடிய கைதிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    விடிய விடிய போலீசார் சோதனை நடத்திய நிலையில் 5 பேர் பிடிபட்டனர். பின்னர் மாலையில் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது வரை 13 பேர் பிடிபட்டுள்ள நிலையில் இன்னும் தலைமறைவாக உள்ள 4 கைதிகளை போலீசார் தேடி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று தப்பி ஓடியவர்களில் 7 பேர் கொலை வழக்கில் கைதானவர்கள் என்பது போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

    Advertisement

    7 பேர் கொலை வழக்கில் கைதானவர்கள்

    26.10.2026 அன்று இரவு சுமார் 10.00 மணியளவில், தேனி மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள் சிறையில் இருந்து தப்பிச் சென்றனர். இவர்களில் கொலை (7), வழிப்பறி (6), போதைப் பொருள் தொடர்பான குற்றங்கள் (2), ஆயுதம் வைத்திருத்தல் (1), திருட்டு (1) போன்ற பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் ஆவர்.

    இத்தகவல் கிடைத்ததும், தென் மண்டலம் மற்றும் மத்திய மண்டல களப்பணியில் உள்ள காவல் அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டனர். வாகனத் தணிக்கை, தங்கும் விடுதிகளில் சோதனை, சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துதல் மற்றும் அந்தந்த பகுதிகளில் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

    Advertisement

    தீவிர தேடுதல் வேட்டை

    காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர் மகேஷ் குமார் அகர்வால். இ.கா.ப.. அவர்களின் உத்தரவின்பேரில், தென் மண்டல காவல்துறைத் தலைவர் திரு. விஜேந்திர எஸ். பிதரி, இ.கா.ப., அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று. மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தார். தமிழ்நாடு சிறப்புக் காவல் படை மற்றும் சிறப்பு இலக்குப் படை ஆகியவற்றைச் சேர்ந்த காவலர்களும் இந்நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    Prison Break: தேனி சிறை சம்பவம்! ஆட்டோவில் தப்பிச் செல்ல முயன்ற சிறை கைதியை மடக்கி பிடித்த தனிப்படை

    தொழில்நுட்பத் தகவல்களைச் சேகரிக்கும் வகையில், கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டதுடன், ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலமாகவும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் தீவிரமாகத் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது. மேலும், காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் அவர்கள் இயக்குநர் திரு. ஆர்.ஏ. சந்திரசேகர். இ.கா.ப.. அவர்களுடன் தொலைபேசியில் கண்காணிப்பைத் கேரள மாநில காவல்துறை தலைமை தொடர்புகொண்டு, எல்லையோர மாவட்டங்களில் தீவிரப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்கள்.

    Advertisement

    தமிழ்நாடு காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையின் பயனாக, தப்பியோடிய 17 கைதிகளில் 13 பேர் 24 மணி நேரத்திற்குள் பிடிக்கப்பட்டனர். இந்நடவடிக்கையில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர் மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்கள். எஞ்சிய கைதிகளைப் பிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.. என்று கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Theni: Within 24 hours, police apprehended 13 of the prisoners who had escaped from Theni prison after attacking the guards. A manhunt has been intensified to locate the remaining 4 individuals. It has also been revealed that 7 of the escaped prisoners were in custody in connection with murder cases.