தேனி கலெக்டர் அதிரடி.. கைம்பெண்கள், முதிர்கன்னிகள் உடனே பதிவு செய்க! ரூ.50,000 மானியம்

  • தேனி: தேனி மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் முதிர்கன்னிகள், அரசின் பல்வேறு நலத்திட்டங்களை தடையின்றிப் பெறுவதற்காகத் தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் தங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    Advertisement

    கைம்பெண்கள், முதிர்கன்னிகள் மற்றும் ஆதரவற்றோர் நலவாரியம் என்பது தமிழ்நாட்டில் கணவனை இழந்தவர்கள், திருமணம் ஆகாமல் வயதான முதிர்கன்னிகள் மற்றும் சமூகத்தில் ஆதரவற்ற நிலையில் உள்ள பெண்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட ஒரு சூப்பரான அமைப்பாகும்.

    Advertisement

    இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உதவித்தொகை, கல்வி மற்றும் திருமண நிதியுதவி, சுயதொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடன்கள் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை இந்த வாரியம் மூலமாக அரசு வழங்கி வருகிறது., இதில் ஏராளமானோர் நேரடியாகவே பலனை பெற்று வருகிறார்கள்.

    தமிழக அரசின் நல வாரியம்

    சமூகத்தில் இத்தகைய பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் களைந்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த வாரியம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கைம்பெண்கள், முதிர்கன்னிகள் ஆதரவற்றோர் நலவாரியத்தில் பதிவு செய்து பயனடையலாம் என்று தேனி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    Advertisement

    தேனி பெண்கள் கவனத்திற்கு

    தேனி மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் இதுகுறித்து கூறும்போது, "தேனி மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், நலிவுற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளை களைந்து அவர்கள் வாழ்வாதாரத்திற்குரிய வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுய உதவி குழுக்கள் அமைப்பது, தொழில் பயிற்சிகள் வழங்குதல், சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்கு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நலவாரியம் கடந்த 2022ம் ஆண்டு செப்.2ம் தேதி உருவாக்கப்பட்டது.

    கைம்பெண்கள் மற்றும் ஆதவற்ற நலவாரியத்திற்கென தனியே இணையதள பக்கம் https://www.tnwidowwelfareboard.tn.gov.in உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதள பக்கத்தில் அரசின் மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

    Advertisement

    ரூ.50 ஆயிரம் மானியம்

    கைம்பெண்கள் மற்றும் ஆதவற்ற நலவாரியத்திற்கென, தமிழ்நாட்டின் கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் ஏழை, எளிய கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை அரசிடம் இருந்து எளிய முறையில் பெற தங்களது விவரங்களை இணையதள முகவரியில் பதிவு செய்து உறுப்பினராகலாம்.

    மேலும் உறுப்பினராக பதிவு செய்யப்பட்டவர்களுக்கு சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள், ஓய்வூதியம், தற்காலிக தங்குமிடம், திறன்வளர்ப்பு பயிற்சி, கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உதவிகள் மற்றும் சுயதொழில் செய்ய மானியம் ரூ.50 ஆயிரம் போன்ற பிற உதவிகள் எளிதாக பெற்றுக்கொள்ளலாம்" என்று மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.

    Advertisement

    நெல்லையிலும் அறிவிப்பு

    கடந்த வாரம், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் அழைப்பு, இவ்வாறான அழைப்பு விடுத்திருந்த நிலையில், தேனி மாவட்டத்துக்கும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    சமூகப் பாதுகாப்பையும், பொருளாதாரச் சுதந்திரத்தையும் உறுதி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில் தகுதியுடைய பெண்கள் அனைவரும் விடுபடாமல் பதிவு செய்து, அரசின் முழுமையான பலன்களைப் பெற்றுத் தங்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே அனைத்து மாவட்ட நிர்வாகத்தின் எதிர்பார்ப்பாகும்..!!

    English Summary

    Theni Collector Important announcement.. Widows and Unmarried Women Register Now to Get Rs 50,000 Subsidy