தேனி சிறையிலிருந்து தப்பிய சகோதரர்கள் சரண்.. தப்பிய குற்றவாளிகள் 17 பேரும் சிக்கினர்! போலீஸ் நிம்மதி

  • தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகளும் தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ளனர். ஏற்கெனவே 15 கைதிகளை போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி பிடித்த நிலையில், தப்பியோடிய சகோதரர்களான திருப்பதி, மீனாட்சி சுந்தரம் ஆகிய இருவரும் கூடலூர் காவல் நிலையத்தில் வழக்கறிஞருடன் சரணடைந்துள்ளனர்.

    Advertisement

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    Advertisement

    முதற்கட்டமாக நேற்று காலை 13 கைதிகளை போலீசார் பிடித்தனர். தொடர்ந்து இன்று காலை அமச்சியாபுரம் மலை அடிவாரப் பகுதியில் மேலும் இருவர் சிக்கினர். இதனால் 15 கைதிகள் போலீசாரிடம் பிடிபட்டிருந்தனர். தலைமறைவாக இருந்த திருப்பதி, மீனாட்சி சுந்தரம் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.

    தப்பியோடிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. குறிப்பாக, ஆண்டிப்பட்டி வழியாக மதுரை மாவட்டத்துக்குள் இருவரும் நுழைந்திருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில், ஆண்டிப்பட்டி கணவாய் அடிவாரத்தில் உள்ள சோதனைச் சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    Advertisement
    நிர்மல்குமாரை தூக்குங்க! எஸ்கேப்பான தேனி கைதிகள்.. விசாரணை கமிஷன் கேட்கும் திமுக! பரபர அறிக்கை

    50க்கும் மேற்பட்ட போலீசார் கார், பேருந்து, லாரி உள்ளிட்ட வாகனங்களைச் சோதனையிட்டுத் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், தேனி சிறையில் இருந்து தப்பிய சகோதரர்களான திருப்பதி, மீனாட்சி சுந்தரம் ஆகிய இருவரும் வழக்கறிஞருடன் கூடலூர் காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்தனர்.

    இருவர் மீதும் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகளும் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். தப்பியோடிய அனைவரையும் பிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டை இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

    English Summary

    All 17 prisoners who escaped from Theni’s Thekkampatti district jail are now in custody after brothers Tirupathi and Meenakshi Sundaram surrendered at Gudalur police station.