தேனி சிறையில் தப்பிய 17 கைதிகள்.. சிக்கிய 4 பேர்.. ட்ரோன் மூலம் தீவிர வேட்டை

  • தேனி: தேனி மாவட்டம், தேக்கம்பட்டி சிறையில் நேற்று இரவு 17 விசாரணை கைதிகள், காவலர்களை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் 4 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில், ட்ரோன்கள் உதவியுடன் கைதிகளை தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    Advertisement

    தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் புழக்கம் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. திமுக ஆட்சியை விட மோசமான சூழல் ஏற்பட்டு வருகிறது. பெண்கள் பாதுகாப்புக்காக சிங்க பெண்கள் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. ஆனால், சிங்க பெண்கள் படைக்கு தனி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். தழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று அரசியல் கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

    Advertisement

    தப்பியோடிய 17 கைதிகள்

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டி மாவட்ட சிறை உள்ளது. நேற்று இரவு 10.30 மணிக்கு வலிப்பு நோய் வந்ததாக கைதிகள் நடித்தனர். 4 காவலர்களை தாக்கிவிட்ட 17 விசாரணை கைதிகள் தப்பினர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தப்பியோடியவர்கள் கைது செய்ய 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. நக்சல் சிறப்பு பிரிவினரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகில் உள்ள மலை பகுதிகளில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டது. தாக்குதலுக்குள்ளான காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

    4 பேர் கைது

    தமிழக கேரள எல்லை குமிழி, கம்பம், போடிமெட்டு பகுதியிலும் தேடுதல் பணி நடந்து வருகிறது. சிறை வளாகத்திற்கு பின்னால் உள்ள காட்டு பகுதியில் மதுரை பெருங்குடியை சேர்ந்த பிரவீன் என்கிற கைதி பிடிபட்டார். தேனி மாவட்டம் தேவாரம் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவரை தனிப்படை போலீசார் இன்று காலை கைது செய்தனர். இதேபோல மதுரையை சேர்ந்த ராஜ்குமார், ராஜா சிக்கந்தர் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

    Advertisement

    இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், "தப்பியோடிய 17 கைதிகளும் ஒரே பிளாக்கில் இருந்தனர். இவர்களில் 15 பேர் மதுரையை சேர்ந்தவர்கள். இவர்கள் திட்டமிட்டு இந்த செயலில் ஈடுபட்டனர். மாலை 6 மணிக்கு மேல் 4 காவலர்கள் மட்டுமே பணியில் இருந்துள்ளனர். 17 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 4 பேர் மட்டுமே பணியில் இருந்தனர். இதை நீண்ட நாட்களாக திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளனர். மீதியுள்ளவர்களை விரைவில் கைது செய்வோம் என்று தெரிவித்துள்ளனர்.

    ட்ரோன் உதவியுடன் தேடும் பணி

    மீதமுள்ள 13 பேரை தேடும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, மாவட்ட சிறை அமைந்திருக்கக்கூடிய தேக்கம்பட்டி பகுதியைச் சுற்றியுள்ள பங்குவார்பட்டி, மணிக்கூண்டு உள்ளிட்ட கிராமப் பகுதிகளிலும், மலையடிவார விவசாய தோட்டப் பகுதியிலும், காட்டுப் பகுதியிலும் கைதிகள் பகுதியுள்ளனரா என்பதைக் கண்டறியும் வகையில் ட்ரோன்கள் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Advertisement

    கிராமப்புறங்களில் புதிதாக ஏதேனும் கைதிகள் பதுங்கியுள்ளனரா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல் தேனி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்ட காவல் துறையினர் பல குழுவாகப் பிரிந்து சோதனைப் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    English Summary

    Police have arrested four of the 17 undertrial prisoners who escaped from Thekkampatti district jail in Theni after allegedly attacking guards, and drones are being used to search for the remaining 13 fugitives.