தேனி JAIL BREAKING.. எஸ்கேப் ப்ளானைப் போட்டுக் கொடுத்ததே இவன் தானா? தென்மண்டல ஐஜி அதிர்ச்சி தகவல்!

  • தேனி: தேனி கிளை கைதிகள் தப்பியோடிய விவகாரத்தில் லிங்க பிரசாத் என்ற கைதி மூளையாக செயல்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என தென் மண்டல காவல்துறை தலைவர் விஜயேந்திர பிதாரி கூறியுள்ளார். சம்பவம் நடந்த அன்று இரவு கைதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது போல நடித்து சிறை காவலர்களை தாக்கி விட்டு தப்பி ஓடி உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

    Advertisement

    தேனி மாவட்ட தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையிலிருந்து 17 சிறை கைதிகள் நேற்று முன்தினம் தப்பி ஓடிய நிலையில் அவர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    Advertisement

    நேற்று முன்தினம் முதல் நேற்று வரை தப்பி ஓடிய சிறை கைதிகள் 17 பேரையும் போலீசார் கைது செய்து கானாவிளக்கு காவல் நிலையத்தில் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பிடிப்பட்ட சிறை கைதிகளில் ஐந்து பேர் தேக்கம்பட்டி சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.

    சிறை கைதிகள்

    இந்த நிலையில் அமச்சியாபுரம் பெரிய மலைப்பகுதியில் பதுங்கி கைது செய்யப்பட்ட கருப்பசாமி, பாண்டி செல்வம், தருண் குமார், சபரிநாதன், கார்த்திக் ராஜா, முத்து இளங்கோவன், சோலை முகிலேஸ்வரன், நிஷாந்த் ஆகிய 8 சிறை கைதிகளை லட்சுமிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனை விசாரித்த நடுவர் நீதிமன்ற நீதிபதி பாசில் அகமது தப்பி ஓடிய 8 சிறை கைதிகளை தேக்கம்பட்டி சிறையில் வருகிற 11-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

    Advertisement

    பிடிபட்ட 17 பேர்

    இதனை அடுத்து 8 சிறை கைதிகளை நீதிமன்ற உத்தரவின்படி மீண்டும் தேக்கம்பட்டி சிலையில் அடைக்க போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். தேனி, தேக்கம்பட்டி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகளையும் பாளையங்கோட்டை, சேலம், கோயம்புத்தூர், கடலூர், வேலூர் ஆகிய 5 சிறைகளில் தனித்தனியாக அடைக்க சிறைத்துறை முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக தப்பியோடிய கைதிகளில் 3 பேர் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    நிர்மல்குமாரை தூக்குங்க! எஸ்கேப்பான தேனி கைதிகள்.. விசாரணை கமிஷன் கேட்கும் திமுக! பரபர அறிக்கை

    விசாரணை நிறைவு

    கடைசியாக சிக்கிய 4 கைதிகளிடம் விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், 4 பேரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தேனி கிளை கைதிகள் தப்பியோடிய விவகாரத்தில் லிங்க பிரசாத் என்ற கைதி மூளையாக செயல்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என தென் மண்டல காவல்துறை தலைவர் விஜயேந்திர பிதாரி கூறியுள்ளார். 26 ஆம் தேதி மாலை சிறை வளாகத்தில் சில கைதிகளுக்கு வழக்குகளில் ஜாமீன் கிடைக்கவில்லை என பேசிக் கொண்டிருந்தனர்.

    Advertisement
    தேனி சிறையிலிருந்து தப்பிய சகோதரர்கள் சரண்.. தப்பிய குற்றவாளிகள் 17 பேரும் சிக்கினர்! போலீஸ் நிம்மதி

    திட்டம் போட்டது யார்?

    இதனையடுத்து மாற்றுத்திறனாளி கைதியான லிங்க பிரசாத் சிறையில் இருந்து தப்பிச் செல்லலாம் என்கிற யோசனையை பிற கைதிகளிடம் முன் வைத்தார். இதனையடுத்து அன்று இரவு கைதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது போல நடித்து சிறை காவலர்களை தாக்கி விட்டு தப்பி ஓடி உள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறையில் இருந்த பிற கைதிகளும் சிறையில் இருந்து தப்பி ஓடி உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Southern Zone IG Vijayendra Bidari says preliminary findings point to prisoner Ling Prasad as the mastermind behind the escape of 17 inmates from Theni jail.