சென்னை: தமிழகத்தில் புழல் சிறையில் 2 பேர் தப்பியது தொடங்கி, நேற்று தேனி தெக்கம்பட்டி சிறையில் 'வலிப்பு நாடகம்' ஆடி ஒரே அறையிலிருந்து 17 கைதிகள் கூண்டோடு தப்பியோடிய சம்பவம் வரை சிறைத்துறையின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
தலைநகரிலும் தென் மாவட்டங்களிலும் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்துக்கொண்டிருக்க, ஆளுங்கட்சி தரப்போ வழக்கம் போல "எது நடந்தாலும் அதற்கு முந்தைய திமுக அரசுதான் காரணம்" என்ற பழைய பல்லவியை பாடி தப்பித்துவிடப் பார்க்கிறது என்ற பேச்சுகள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன.
எங்கே இந்த 17 பேர் தப்பியோடிய மாபெரும் பாதுகாப்பு குளறுபடிக்கும் தவெக அரசை சேர்ந்தவர்கள் "திமுகவின் சதி" என்று சொல்லி பொறுப்பைத் தட்டிக் கழித்து விடுவார்களோ என்று யோசித்த நாம், ஆளுங்கட்சி செய்தித் தொடர்பாளர்கள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காகவே முன்வந்து சில அதிமேதாவித்தனமான நையாண்டி யோசனைகளை வாரி வழங்கி உள்ளோம். இதோ அந்த 15 நகைச்சுவை யோசனைகள்: கைதிகள் தள்ளியதும் எளிதாகத் திறந்துகொண்ட சிறைக்கதவின் தாழ்ப்பாள் மற்றும் பூட்டுகள் கடந்த கால திமுக ஆட்சியில் டெண்டர் விட்டு வாங்கப்பட்டவை; அதனால்தான் அவை தானாகத் திறந்து கைதிகளை வெளியேற அனுமதித்துவிட்டன! கைதிகள் அத்தனை தத்ரூபமாக வலிப்பு வந்தது போல துடித்து நாடகமாடியதற்குப் பின்னால் முந்தைய திமுக அரசின் திரைக்கதை-வசனப் பயிற்சியே மறைமுகக் காரணம்! அவர்கள் சொல்லி இவர்கள் செய்கிறார்கள். தப்பியோடிய கைதிகளின் எண்ணிக்கை சரியாக 17 ஆனது தற்செயல் அல்ல.. ஆளுங்கட்சியின் இமேஜைக் குலைக்க வேண்டும் என்பதற்காகவே 17 பேரைக் கணக்கு வைத்து திமுகதான் தப்ப வைத்திருக்கிறது! சிறைச்சாலை சுவர்கள் போதுமான உயரமும் பலமும் இல்லாமல் போனதற்குக் காரணம் முந்தைய ஆட்சியின் மணல்-சிமெண்ட் கலவைதான். அப்போதே அதில் ஊழல் பண்ணிட்டாங்க. இதில் இப்போதைய ஆட்சி என்ன செய்யும்? அன்பில் மகேஷ் கைது வெளியே தெரியக்கூடாது என்று திட்டமிட்டு கைதிகளை திமுக தப்ப வைத்துள்ளது. நள்ளிரவு நேரத்தில் காவலர்களைத் தாக்கும்போது வெளிச்சம் குறைவாக இருந்ததற்கு, கடந்த காலத்தில் வாங்கப்பட்ட எல்இடி பல்புகளின் ஆயுள் முடிந்ததுதான் முக்கியக் காரணி! அல்லது நிர்மல் சார் சொல்வது போல.. திமுகவினர் பியூஸ் பிடுங்கி இருப்பாங்க! புழலில் சிறை அங்காடி வழியே கைதி நழுவியதற்கு, "அங்கே வந்து கூட்டம் போட்டு பரோட்டா வாங்கியது எதிர்க்கட்சியினர்தான், கூட்ட நெரிசலை உண்டாக்கி கைதியை ஓட வைத்துவிட்டார்கள்" என்று கிளப்பிவிடலாம்! சிறை வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராக்கள் அந்த நேரத்தில் ஒழுங்காகப் படம் பிடிக்காமல் மக்கர் செய்ததற்கு, முந்தைய ஆட்சியின் போது பொருத்தப்பட்ட பழைய உதிரிபாகங்களே காரணம்! சிறையில் கொசுக்கடி தாங்க முடியாமல் எரிச்சலடைந்ததால்தான் கைதிகள் வெளியே ஓடிவிட்டார்கள்; சிறைச்சாலைக்குள் கொசு உற்பத்தியாவதைத் தடுக்கத் தவறியது முந்தைய ஆட்சியின் சுகாதாரத்துறைதான்! சக மனிதனுக்கு வலிப்பு என்றதும் வார்டன்கள் ஓடிச்சென்று கதவைத் திறந்த அந்த அதீத மனிதாபிமானமே முந்தைய ஆட்சியின் தவறான வழிகாட்டலால் வந்தது; இல்லையென்றால் அவர்கள் கதவைத் திறந்திருக்கவே மாட்டார்கள்.. இவர்கள் எல்லாம் திமுக ஆட்கள் இப்படி நகைச்சுவையாக எத்தனையோ காரணங்களை அடுக்கினாலும், கள யதார்த்தம் என்னவோ மிகக் கசப்பானது. புழலில் 2 பேர் அசால்ட்டாக சுவரேறி குதித்து ஓடுவதும், தேனியில் 17 பேர் மொத்தமாக காவலர்களை அடித்துப்போட்டுவிட்டு தப்பிப்பதும் சிறைத்துறை மற்றும் உளவுத்துறையின் முழுமையான தோல்வியையே காட்டுகிறது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.1. அந்த பூட்டு ஸ்டாலின் ஆட்சியில் போட்டதுங்க!
2. வலிப்பு நாடகத்துக்கு ஆலோசனை வந்ததா?
3. 17 என்ற எண்ணே திமுகவின் சதி!
4. சிறைத்துறை சுவரில் சிமெண்ட் பூசியது முந்தைய அரசு!
5. அன்பில் மகேஷ் கைது
6. விளக்குகள் அணைந்தது மின்வாரியத்தின் பழைய சதி!
புழல், தேனி ஜெயில்.. அடுத்தடுத்து தப்பி ஓட்டம்.. விஜய் ஆட்சியில் கைதிகளுக்கு வந்த திடீர் துணிச்சல்!
7. புழல் சிறை அங்காடியில் பரோட்டா ஆர்டர் போட்டது யார்?
8. சிசிடிவி கேமராக்களுக்கு கண் மங்கியது திராவிட மாடலால்!
9. சிறைக்குள் கொசு கடித்ததே திமுகவின் பழிவாங்கும் நடவடிக்கை!
10. வார்டன்கள் காட்டியது திமுக ஆட்சியில் கற்றுக்கொண்ட கருணை!
தேனி ஜெயில் பிரேக்.. சீவலப்பேரி பாண்டி தப்பித்த கதை தெரியுமா? ஆட்டம் காணும் தமிழக சட்டம்-ஒழுங்கு?